gayathiri compare kanjakarupu and barani
நடன இயக்குனர் காயத்ரி ரகுராம் தன்னுடைய செய்கையால் யாரையும் புண் படுத்த வில்லை என்றாலும் தன்னுடைய பேச்சால் பலரை புண்படுத்தி வருகிறார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில், காய்த்ரி சாக்லேட் பவுடர் பெறுவதற்காக தனக்கு உடலில் கால்சியம் அளவு குறைவாக இருந்ததாக அனைவரிடமும் கூறுகிறார். இதனால் இவர் பொய் சொல்கிறார் என்றே பலரும் பார்த்தனர். பின் காயத்ரி கூறுகையில் தனக்கு சீராக என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாது கூறி மலுப்பினாலும் அனைவருக்கும் உண்மை எது என்று அறிந்த விஷயமே... இதனால் அனைவர் முன்னிலையிலும் அந்த சாக்லேட் பவுடர் தனக்கு வேண்டாம் என திருப்பி கொடுத்தார்.
தற்போது அனைத்து போட்டியாளர்களும் பிக் பாஸ் நிகழ்ச்சி தாங்கள் செய்கின்ற தவறை மட்டுமே சுட்டி காட்டி வருவதாக தெரிவித்த நிலையில். இதற்கு ஓவியா அப்படியெல்லாம் இல்லை எப்போதும் நீங்கள் நீங்களாக இருங்கள் பின் எந்த பிரச்னையும் வராது என்பது போல கூறினார்.
இதற்கு காயத்திரி தீடீர் என கோபம் வந்து கருப்பு அண்ணன் பரணியை விட கெட்டவரா என கேள்வி எழுப்பினார். அதற்கு ஓவியா பரணிக்கு சப்போர்ட் செய்து ஏன் இரண்டு பெயரையும் ஒப்பிட்டு பேசவேண்டும். நாம் ஒரு குடும்பமாக வாழும்போது ஒருவரை சிலிண்டரால் தாக்க போவது தவறு தான் இதை ஒளிபரப்பி இருந்தால் மக்கள் இப்படித்தான் நினைப்பார்கள் என ஓவியா கூறினார்.
இதற்கு காயத்திரி நீ எல்லாருடைய ஓட்டையும் பெற்று இங்கேயே இரு நாங்கள் கிளம்புகிறோம் என கூறியதும்... காயத்ரிக்கு ஜால்றா போடுவது போல நமிதாவும், ஜூலியும் ஏதோ முணுமுணுத்துக்கொண்டிருந்தனர் .
