Gautham Vasudev released the name of MX.
“என்னை நோக்கி பாயும் தோட்டா” படத்தின் இசையமைப்பாளர் பெயரை இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு நீண்ட நாள் சஸ்பென்ஸை உடைத்தார்.
தனுஷ் - மேகா ஆகாஷ் நடிப்பில் கெளதம் மேனன் இயக்கிருக்கும் திரைப்படம் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’.
இந்தப் படத்தின் இசையமைப்பாளரின் பெயரை இயக்குநர் கெளதம் மேனன் வெளியிடாமல் மிஸ்டர்.எக்ஸ் என்று மட்டும் குறிப்பிட்டு சஸ்பென்ஸ் வைத்து வந்தார்.
இசையமைப்பாளர் பெயரை வைத்து பாடல்கள் ஹிட்டாகவில்லை என்பதை நிரூபிக்க இப்படி ஒரு சஸ்பென்ஸ் வைத்திருந்தாராம்.
இந்த நிலையில் தீபாவளியான நேற்று மிஸ்டர் எக்ஸ் பெயரை அறிவித்துள்ளார் கௌதம்.
ஆம். “என்னை நோக்கி பாயும் தோட்டா” படத்தின் இசையமைப்பாளரின் பெயர் ‘தர்புகா சிவா’.
