Gautham Karthik Indrajiths trailer release ...

கௌதம் கார்த்திக் நடிப்பில் உருவாகி வரும் இந்திரஜித் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவர் கௌதம் கார்த்திக். தொடர்ச்சியாக ஏராளமான படங்களை கைவசம் வைத்துக் கொண்டு பிஸியாக நடித்து வருகிறார்.
அடல்ட் காமெடியான ஹர ஹர மஹாதேவகி படத்தின் வெற்றிக்கு பிறகு அவர் இந்திரஜித் படத்தில் நடித்து வருகிறார்.

ஆக்‌ஷன் அட்வென்சர் கதைக் களத்தில் உருவாகி வரும் இப்படத்தின் டிரைலர் நேற்று வெளியாகியுள்ளது. இதில் அஷ்ரிதா ஷெட்டி நாயகியாக நடித்து வருகிறார். இவர்களுடன் சோனாரிகா பதோரியா, சுதன்சு பாண்டே, பிரஹாப் போத்தன், ராஜ்வீர் சிங் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இப்படத்தை கலாபிரபு எழுதி, இயக்கியுள்ளார். இதை கலைப்புலி எஸ். தாணு தயாரித்து வருகிறார்.