ganja karupu is genuine certificate by shegan

பட வாய்ப்புகள் இல்லாததால் தற்போது தன்னுடைய சொந்த ஊரில், விவசாயத்தை கவனித்து கொண்டிருந்த கஞ்சா கருப்புவை அழைத்து பிக் பாஸ் சர்ச்சையில் சிக்க வைத்துள்ளனர் நிகழ்ச்சியாளர்கள்.

இவர் ஏகப்பட்ட புரணி பேசி இந்த நிகழ்ச்சியை மிகவும் ஸ்வாரஸ்யமாக எடுத்து செல்ல உதவி செய்து வருகிறார்.

மேலும் ஏற்கனவே ஓவியாவிடம் சண்டை இழுத்த இவர் அடுத்ததாக நடிகர் பரணியுடன் காரஞ்சாரமாக சண்டையில் மோத உள்ளதாக ஒரு வீடியோ வெளியிட்டுள்ளனர் பிக் பாஸ் நிகழ்ச்சியாளர்கள்.

நேர்மையான மனிதருக்கான விருது பெற்ற இவர் கொஞ்சம் கூட நேர்மை இல்லாதவராக தான் இருக்கிறார், காரணம் நடன இயக்குனர் காயத்திரி ரகுராம், ஆர்த்தி, சக்தி, சினேகன் ஆகியோர் அமர்ந்து பேசும் போது நடிகை அனுயா 2 மணிக்கு தான் குளிக்க போகும் அதனால் அதுக்கு தான் அலுமினிய குண்டான என பெயர் வைத்துள்ளதாக கூறுகிறார்.

ஆனால் விருது வாங்கியவுடன் நமிதா அக்கா , ஓவியா சின்னம்மா , காயத்ரி தாய் போன்றவர் என்று கூறுகின்றனர்.

 நடிகை நமீதாவை சனியன் எப்ப பார்த்தாலும் எனக்கு வேலை கொடுத்து கொண்டே இருக்கு என்றும், ரைசா ஒரு மேக் அப் பைத்தியம் என பின்னல் போய் புரணி கூறுபவர் எப்படி நேர்மையானவராக இருக்க முடியும்.

நேர்மையானவன் என்கிற விருதை கஞ்சா கருப்புக்கு அளித்ததை யாரும் ரசிக்கவில்லை. விருது அளித்த அன்றே பரணியை பற்றி ஏகத்துக்கு குறை சொல்வதாக காட்சி அமைத்துள்ளனர்