gangai amaran talks about ilayaraja



இளையராஜாவின் பாடல் வரிகள் அனைவருக்கும் பிடிக்கும். அதை பாடக்கூடாது என்று சொல்வதற்கு இளையராஜாவிற்கு உரிமை இல்லை என அவரின் சகோதரரும், இசையமைப்பாளருமான கங்கை அமரன் தெரிவித்துள்ளார்.

எஸ்.பி.பாலசுப்பிரமணியம் திரையுலகிற்கு வந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது.

இதனால் அதை கொண்டாடும் வகையில், எஸ்.பி.பி பல்வேறு நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து இசை நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறார்.

அந்த நிகழ்ச்சியில் பல்வேறு இசையமைப்பாளர்கள் பாடிய பாடல்களை அவர் பாடியுள்ளார். இந்நிலையில், முறையான அனுமதியின்றி தன்னுடைய பாடல்களை எப்படி பாடலாம் என்று எஸ்.பி.பிக்கு இளையராஜா நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இதுகுறித்து பதிலளித்த எஸ்.பி.பி, எனக்கு சட்ட விதிமுறைகள் குறித்து தெரியாது. இருந்தாலும் சட்டத்தை மதிக்க வேண்டியது எனது கடமை. இனி மேடைகளில் இளையராஜாவின் பாடல்களைப் பாடப்போவதில்லை என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இதுகுறித்து இளையராஜாவின் சகோதரர் கங்கை அமரன் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:

இளையராஜாவின் இசை எல்லோருக்கும் பிடிக்கும்.

அதை பாடக்கூடாது என்று சொல்வதற்கு உனக்கு என்ன உரிமை உள்ளது.

அனைவரும் பாடுவார்கள், ரோட்டில் நான் கூட பாடுவேன்.

இளையராஜாவிற்கு வயதாகிவிட்டது. ஒன்னும் புரியமாட்டேங்குது.

அவர் பாடலை பாடுவது விதிமீறல் என்றால் அந்த விதிமீறலை திரும்ப திரும்ப செய்வோம்.

இவ்வாறு கங்கை அமரன் கூறியுள்ளார்.