Gana bala quit the song singing
2007 ஆண்டு 'பிறகு' படத்தின் மூலம் கானா பாடகராக அறிமுகம் கொடுத்தவர் கானா பாலா, 2012 ஆண்டு வெளிவந்த அட்டகத்தி படத்தில் மிகவும் பிரபலமான பாடகராக அறியப்பட்டார்.
இந்த படத்தை பல படங்களுக்கு பல ஹிட் பாடல்களை கொடுத்து முன்னணி பாடகர்களில் ஒருவராக அறியப்பட்டது மட்டும் இன்றி, இவர் எழுதி பாடும் பாடல்களுக்கு தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது.
இதுவரை ஐம்பதுக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ள கானா பாலா, இவர் பாடியுள்ள சில பாடங்களுக்கு சிறப்பு தோற்றத்திலும் நடித்துள்ளார்.
தற்போது தான் இன்னும் ஒரு வாரம் மட்டுமே பாடவுள்ளதாகவும் அதற்கு மேல் பாடமாட்டேன் என அதிரடியாக கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், எப்போதும் வளர்ந்து வரும் சந்ததிகளுக்கு, வளர்ந்தவர்கள் வழி விட்டால் தான் அவர்கள் வளர்வார்கள். எனவே நான் இப்போது விலகும் நேரம் வந்துவிட்டது என்றும் இனி இந்த கலையை எடுத்து செல்ல மற்ற இளைஞர்கள் இருக்கிறார்கள் என்றும் கூறியுள்ளார்.
இவரின் இந்த முடிவை பலரும் பாராட்டி வருகின்றனர். இவரை போலவே பலரும் இளைஞர்கள் சாதிக்க வழிவிட வேண்டும் என சமூவலைத்தளங்களில் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.
