பிக்பாஸ் வீட்டின் உள்ளே உள்ள போட்டியாளர்கள் ஆரியை எதிரியாக பார்த்தாலும், வெளியே உள்ள அவரது ரசிகர்கள் அவரை ஹீரோவாக பார்த்து வருகிறார்கள். மேலும் உள்ளே வரும் அனைத்து போட்டியாளர்களின் குடும்பத்தினரும் கூட ஆரி மீது தனி மதிப்பு வைத்திருப்பது அவர்களது பேச்சில் இருந்தே தெரியவருகிறது.

அந்த வகையில் ஷிவானியின் அம்மா, ரம்யாவின் சகோதரர், என உள்ளே வந்தவர்கள் ஆரி மீது தங்களுக்கு இருந்த மதிப்பையும் மரியாதையையும் காட்டினர். ஆரியும் போட்டியாளர்கள் தன்னை பற்றி பின்னல் சென்று புறணி பேசினாலும் அதனை சற்றும் கண்டு கொள்ளாமல், அனைத்து போட்டியாளர்களின் உறவினர்களையும் சிரித்து உபசரித்து வருகிறார்.

அந்த வகையில் இன்று பிக்பாஸ் வீட்டிற்குள் வரும் கேப்ரில்லாவின் அம்மா, மகளுக்கு தனித்தன்மையோடு விளையாடு என கூறியதோடு, ஆரிக்கு ஐஸ் வைத்த காட்சிகளும் இடம் பெற்றுள்ளது. 

இன்றைய தினம் உள்ளே வரும் கேப்ரில்லாவின் அம்மா மகளை கட்டிப்பிடித்து சந்தோஷப்பட்டு பின், ஆரியை பார்த்து, ‘உங்களை நான் ’நெடுஞ்சாலை’ படத்திலேயே பார்த்திருக்கிறேன் என்று கூறி ஐஸ் வைக்கிறார்.

அதன் பின்னர் கேபியுடன் அவர் தனியாக பேசும் போது ’நீ டாஸ்க் எல்லாம் நன்றாகத்தான் செய்கிறாய் ஆனால் ’குரூப்பாக பண்ணுகிறாய், உன்னுடைய தனித்தன்மையும் அதில் வெளிப்பட வேண்டும், அதற்கு முயற்சி பண்ணு’ என்று அவர் கூறுகிறார். அதற்கு கேப்ரில்லா ’நான் சரியாக டாஸ்க் பண்ணினாலும் ஒரு சிலர் என்னை மட்டம் தட்டுகின்றனர். அதனால் சண்டை போட்டு எதையும் வாங்க வேண்டிய அவசியம் இல்லை என்று நான் அப்படியே விட்டு விட்டேன் என்று கேபி கூறுகிறார். அந்த புரோமோ இதோ...