தான் ஒரு இசையமைப்பாளர் என்பதை தானே மறந்து வருடத்துக்கு ஏழெட்டுப் படங்கள் நடித்து செம துட்டு பார்த்து வருபவர் ஜீ.வி.பிரகாஷ். கதை கேட்பதில்லை, படத்தின் தரம் பார்ப்பதில்லை. தயாரிப்பாளர் மற்றும் அட்வான்சோடு ஒரு டைரக்டர் வந்தாலே அந்தக் கதை ஓ.கே. என்னும் அளவுக்கு வருபவர்களைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்வார். அவருக்கு தேவை காசு, பணம்,மணி துட்டு.

அப்படி அவர் நடிக்கும் படங்களில் ஒன்று தான் ‘100 % காதல்’. தமன்னா, நாக சைதன்யா நடிப்பில் தெலுங்கில் மாபெரும்  வெற்றி பெற்ற ‘100 % லவ்’ படத்தின் தமிழ் ரீமேக்கான இதில் பிரகாஷ்குமாருக்கு ஜோடியாக ஷாலினி பாண்டே நடிக்கிறார்.இயக்குநர் சுகுமாரின் நண்பரான சந்திரமெளலி இப்படத்தை இயக்குகிறார். இவர், தெலுங்கு சினிமாவின் விநியோகஸ்தர் ஆவார்.

 இந்த ‘100 % காதல்’ படத்தில் பணியாற்றும் பலருக்கு 10 சதவீதம் கூட சம்பளம் தரவில்லை, என்று இப்படத்தில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர் ஒருவர் புலம்பிக் கொண்டிருக்கிறார்.இந்த படத்தை தெலுங்கில் விநியோகம் செய்து நல்ல லாபம் பார்த்த விநியோகஸ்தர் சந்திரமெளலி தான், தமிழில் இப்படத்தை இயக்கினாலும், தயாரிப்பு தரப்பிலும் அவரது கை தான் ஓங்கியிருக்கிறதாம். அதனால், படத்தின் செலவுகளை குறைப்பதாக சொல்லி, வேலை பார்த்தவர்களுக்கு சரியான ஊதியம் கொடுக்காமல் டபாய்க்கிறாராம். 

பல முக்கிய டெக்னீஷியன்களுக்கு அடுத்தபடியாக இப்படத்தில் சுத்தமாக சம்பளமே வராமல் வயிறு காய்ந்துகொண்டிருப்பவர்கள் படத்தின் உதவி இயக்குநர்கள். ‘ஒழுங்கா சம்பளம், பேட்டா எதுவுமே புரடியூசர் தர்றதே இல்லை. இதை ஜீ.வி.பிரகாஷ்கிட்ட சொன்னா கண்டும் காணாததுமா இருக்கார்’ என்று குற்றம் சாட்டுகிறார்கள் 100% சீட்டிங் பண்ணப்படும் தொழிலாளர்கள்.