தமிழ் சினிமாவில் வித்தியாசமான முயற்சிகள் எதுவும் திரையரங்கு உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் போன்ற வியாபாரிகளால் அவ்வளவு லேசில்  அங்கீகரிக்கப்படுவதில்லை என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபிப்பதுபோல் உள்ளது இயக்குநர் பார்த்திபனின் ‘ஒத்தச் செருப்பு’படம் பற்றிய ட்விட்டர் பதிவு ஒன்று.

தமிழ் சினிமாவில் முதல் முயற்சியாக முழுப்படமும் தான் ஒரு நபர் மட்டுமே நடித்து’ஒத்தச்செருப்பு’என்ற படத்தை இயக்கி ரிலீஸுக்குத் தயாராக இருக்கிறார் பார்த்திபன். இப்படத்தின் ஆடியோ ரிலீஸ் வெகு விமரிசையாக நடந்து முடிந்து இரு மாதங்களுக்கும் மேல் ஆகியுள்ள நிலையில் படத்தை இன்னும் விநியோகஸ்தர்கள் யாரும் வாங்க முன்வரவில்லை என்று தெரிகிறது. அந்த விரக்தியில் இன்று காலை தனது ட்விட்டர் பக்கத்தில்,...R.Parthiban @rparthiepan,...அணைப்பிற்கு அழைப்பு! ரசிகர்களின் அரவணைப்பிற்கு!
நான் என்னையும் ரசிகர்களையும் தான் நம்புகிறேன்.ஆனால் சினிமா வியாபாரம் 'ஒத்த செருப்பு' போன்ற புத்தம் புதிய முயற்சிகளை (நியாமான) சந்தேகப் பார்வையுடனே பார்க்கிறார்கள்! 
தீக்குளித்து நிரூபிப்பேன் அணைக்க மட்டும் ரசிகர்கள் போதும்!...என்று பதிவிட்டிருக்கிறார்.

இப்பதிவிற்கு அவருக்கு .,.. We will support u sir.. தமிழ் சினிமாவ பிரம்மாண்டமாக எடுத்து உலகிற்கு காட்ட இங்கு நிறைய பேர் உண்டு ஆனால் தமிழ் சினிமா வித்தியாசமான படங்கள் கொடுக்கும் எனக்காட்ட ஒரு சிலரே உண்டு அதில் உங்களுடைய பங்கு அதிகம்
அணைக்க நாங்கள் உண்டு இல்லைன சேர்ந்து எரிந்து நிருபிப்போம் காட்டுத்தீயென,...அன்று அந்த ரா மனின் செருப்பு நாட்டை ஆண்டது போல், ஆகஸ்ட் 30 அன்று இந்த " ரா பா "வின் ஒத்த செருப்பு ரசிகர்களின் மனங்களை ஆளும்💐💐 என்பது போல் ஏகப்பட்ட ஆறுதல் கமெண்டுகள் குவிந்து வருகின்றன.