அசின் முதல் காஜல் அகர்வால் வரை - தொழிலதிபர்களை மணந்த டாப் தமிழ் நடிகைகள்!

90களின் துவக்கத்தில் கொடிகட்டி பறந்த டாப் 3 நடிகைகளின் பட்டியலில் எப்போதும் இவர் பெயர் நிச்சயம் இருக்கும்.

From Asin to Kajal Agarwal Actress Married Billionaire

தமிழ் நடிகைகள் பலர் புகழின் உச்சத்தில் தாங்கள் இருக்கும் காலத்திலேயே தங்கள் மனம் கவர்ந்தவர்களை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகியுள்ளார்கள். குறிப்பாக ரம்பா, அசின் துவங்கி ஷ்ரேயா, காஜல் அகர்வால் வரை பலரும் தொழிலதிபர்களை மணந்து தற்போது தங்களது குடும்ப வாழ்க்கையை மகிழ்ச்சியாக கழித்து வருகின்றனர். 

Ramba

ரம்பா 

90களின் துவக்கத்தில் கொடிகட்டி பறந்த டாப் 3 நடிகைகளின் பட்டியலில் எப்போதும் இவர் பெயர் நிச்சயம் இருக்கும். ஆந்திர பெண்ணான ரம்பா தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, ஆங்கிலம், போஜ்புரி மற்றும் பெங்காலி என்று பல  இந்திய மொழிகள் பல படங்களில் நடித்துள்ளார். 

அவருடைய 20 ஆண்டுகால சினிமா பயணத்தில் ஏறக்குறைய தமிழில் உள்ள அனைத்து முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடித்துள்ளார் ரம்பா. 2010ம் ஆண்டு நடிப்புக்கு எண்டு கார்டு போட்ட கையேடு இந்திரகுமார் பத்மநாதன் என்பவரை திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டார். தற்போது தனது கணவர் மற்றும் 3 குழந்தைகளோடு மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றார். 

Asin

இதையும் படியுங்கள் : கொடைக்கானலில் கங்குவா லோடிங் - சூர்யா லுக் வேற லெவல்!

அசின் 

இவர் கேரளத்து பைங்கிளி, 15 ஆண்டுகளாக ரசிகர்களை தனது நடிப்பால் கிறங்கடித்த ஒரு சூப்பர் நடிகை. நடிகர்கள் விஜய், அஜித், சூர்யா, விக்ரம் துவங்கி உலக நாயகன் கமல்ஹாசன் வரை பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார் அசின். 25 படங்கள் நறுக்கென்று நடித்து, பல அழகு சாதனா நிறுவனங்களின் "பிராண்ட் அம்பாசிடராக" இருந்து பின் நடிப்புக்கு எண்டு சொன்னவர் இவர்.       
 
இவரும் நடிப்பை நிறுத்திய அடுத்த ஆண்டே ராகுல் சர்மா என்ற பெரிய தொழிலதிபரை மணந்து குடும்ப வாழ்க்கையில் பயணித்து வருகின்றார். 

Kajal Agarwal

காஜல் அகர்வால் 

வடக்கில் இருந்து வந்த சிறந்த நடிகைகளில் இவரும் ஒருவர், கடந்த 2004 முதல் இன்று வரை சுமார் 20 ஆண்டுகளாக தமிழ் திரையுலகிலும், பிற மொழி படங்களிலும் வெற்றிகரமாக நடித்து வருகின்றார். சங்கர் இயக்கத்தில் கமல் நடித்து வரும் இந்தியன் 2 படத்தில் காஜல் நடித்து வருகின்றார். ஆண்டுகள் பல கண்டந்துவிட்டாலும் இன்றளவும் மார்க்கெட் குறையாமல் பயணித்து வருகின்றார் காஜல். 

கவுதம் என்ற தொழிலதிபரை கடந்த 2020ம் ஆண்டு மணந்து திருமண வாழ்க்கையையும், திரைவாழ்க்கையையும் ஒருசேர கவனித்து வருகின்றார்.

Reema Sen 

ரீமா சென் 

கவுதம் வாசுதேவ் மேனனின் மின்னலே படம் மூலம் இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நடிகை தான் ரீமா சென். 12 ஆண்டுகளில் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் பெங்காலி என்று பல மொழிகளில் நல்ல நடிகையாக வலம்வந்தவர். கிளாமர் நாயகியான இவர் 2012ம் ஆண்டு வெளியான சட்டம் ஒரு இருட்டறை என்ற படத்தில் இறுதியாக நடித்திருந்தார். 

அந்த ஆண்டே சிவ் கரண் சிங் என்ற தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டு, ஒரு குழந்தைக்கு தாயாக தற்போது மகிழ்ச்சியோடு வாழ்ந்து வருகின்றார். 

இதையும் படியுங்கள் : "சூர்யா சொல்லியும் கேட்கல" - உதயநிதியை வருத்தப்பட வைத்த ஏழாம் அறிவு

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios