90 களின் தன்னுடைய கவர்ச்சியால் கோலிவுட் திரையுலகையே கலக்கிய முன்னணி நடிகை தொடையழகி ரம்பா.  தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருக்கும் அஜித், விஜய் உள்ளிட்ட பல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து தனக்கென மிகப்பெரிய ரசிகர் கூட்டத்தை வைத்திருந்தவர்.

இப்போது இவருக்கு வெள்ளித்திரையில் நடிக்க வெயிட்டான கதாப்பாத்திரம் கிடைக்காததால்,  சில காலம் சின்னத்திரை நடன நிகழ்ச்சிகளில் நடுவராக இருந்தார்.

கனடா நாட்டை சேர்ந்த தொழில் அதிபர் இந்திரகுமார் என்பவரை கடந்த 2010 ஆம் ஆண்டு, திருமணம் செய்துக் கொண்ட இவருக்கு தற்போது லான்யா, ஷாஷா என்கிற இரண்டு பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. 

கடந்த சில மாதங்களுக்கு முன், இவர் மூன்றாவது குழந்தையை பெற்றெடுத்தாலும், இது வரைகுழந்தையின் புகைப்படம் வெளியிடாமல் இருந்தார் ரம்பா. 

இந்நிலையில் தற்போது ரம்பா இவருடைய ஆண் குழந்தை உட்பட குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகியுள்ளது. கணவர் மற்றும் மூன்று குழந்தைகளுடன் ரம்பா இருக்கும் புகைப்படங்களை பார்க்கும் சினிமா ரசிகர்கள் ரம்பாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.