முகநூல் பக்கங்களில் போலியான மற்றும் தனிநபர் மீதான அவதூறுச் செய்திகளைச் செய்திகளைப் பரப்புபவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக  மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், நடிகை மஞ்சு வாரியர்,மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் கன்னட நடிகர் ரக்‌ஷித் ஷெட்டி ஆகிய பிரபபங்களைக் கொண்ட குழுவை அந்நிறுவனம் நியமித்துள்ளது.

சமூக ஊடகங்களில் போலி செய்திகள் பரவுவது ஒரு தீவிரமான விளைவுகளை ஏற்படுத்தும் ஒரு பிரச்சினையாகும். வகுப்புவாத வன்முறை மற்றும் வெறுப்பைத் தூண்டுவது முதல் தவறான தகவல்களை அனுப்புவது வரை, பல போலி செய்தி வலைத்தளங்களும் சமூக ஊடகங்களில் உள்ள பக்கங்களும் அன்றாட அடிப்படையில் சரிபார்க்கப்படாத செய்திகளை உருவாக்குகின்றன.

இந்த அச்சுறுத்தலை எதிர்த்துப் போராடுவதற்காக, பல புதிய யுக்திகளை வகுத்துவரும்  ஃபேஸ்புக் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த சில பிரபலமான முகங்களுடன் கூட்டு சேர்ந்து செயல்பட முடிவு செய்துள்ளது. இதன் முதல் முயற்சியாக மலையாள நடிகர்கள் மோகன்லால் மற்றும் மஞ்சு வாரியர், தமிழ் நடிகர் விஜய் சேதுபதி, கன்னட நடிகரும் தயாரிப்பாளருமான ரக்ஷித் ஷெட்டி ஆகியோர் போலி செய்திகள் குறித்து பொதுமக்களை எச்சரிக்கும் பிரபலங்களின் வரிசையில் உள்ளனர்.

இது தொடர்பாக வெளியிட்டுள்ள வீடியோவில் பேசியுள்ள  நடிகை மஞ்சு வாரியர்,...தவறான தகவலுக்கு ஒரு தீர்வு இல்லை.  ஆனால் நாம் ஒன்றாக இணைந்து , போலி செய்திகள், வதந்திகள் மற்றும் தீங்கு விளைவிக்கும் பிற செயல்பாடுகளை  குறைக்கலாம். தவறான தகவல்களுக்கு எதிராக பேசுவதற்கான பேஸ்புக்கின் முன்முயற்சியின் ஒரு பகுதியாக இருப்பதும், சமூக ஊடகங்களில் வதந்திகள் மற்றும் போலி செய்திகள் பரவுவதை தடுக்கும் வழிகளும் உருவாக்கப்படுவதை நினைக்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது’ என்கிறார்.https://www.facebook.com/theManjuWarrier/videos/2326842284069125/