தமிழ் திரையுலகில் உள்ள உச்ச நட்சத்திரத்தில் ஒருவராக இருக்கும் அஜித்தின், வீட்டில் தற்போது வனத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து வெளியாகியுள்ள தகவலில், அஜித்தின் வீட்டில் வசித்து வரும் அவரின் பி.ஆர்.ஓ சுரேஷ் சந்திரா, மலைப்பாம்பு ஒன்றை வளர்த்து வருவதாக, வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்ததை தொடர்ந்து இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் அஜித்தின் வீட்டில் இருந்த அவரின் பி.ஆர்.ஓ. தற்போது  பனையூர் அருகே வேறு வீட்டிற்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது. இந்த தகவல் தற்போது, திரையுலகினர் மத்தியிலும், அஜித்தின் ரசிகர்கள் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வனத்துறையினரின் இந்த சோதனையில், அஜித்தின் மேனேஜரும், பி.ஆர்.ஓ வுமான சுரேஷ் சந்திரா வளர்த்த மலைப்பாம்பு சிக்கியதா, அல்லது பனையூரில் உள்ள வீட்டிற்கு, மலைப்பாம்பை கொண்டு சென்று விட்டாரா? சுரேஷ் சென்ற என பல்வேரு சந்தேகங்கள் எழுந்துள்ளது.

எனினும்... அஜித்தின் பி.ஆர்.ஓ மலைப்பாம்பு வளர்ப்பதாக அரசால் புரசமாக பரவிய செய்தி தான் இந்த ரெய்டுக்கு காரணம் என கூறுகிறார்கள், இவருக்கு நெருக்கமானவர்கள்... ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்பது, வனத்துறையினரின் தீவிர விசாரணைக்கு பின்பே தெரியவரும்.