வரிசையாக கொல்லப்படும் பெண் குழந்தைகள்... மலையாள க்ரைம் ரீமேக்கிற்கு தமிழில் கிடைக்குமா வரவேற்பு?

திரில்லர் என்றால் இதுதான் என்று ஒவ்வொரு காட்சிகளும் நெஞ்சை அள்ளிக் கொள்ளும் விதமாக "கடைசி நொடிகள்"  இருப்பதாக கூறப்படுகிறது. 

Forensic movie tamil remake coming soon

கேரளாவில் பாரன்ஸிக் எனும் பெயரில் வெளிவந்து சக்க போடு போட்ட படத்தை தமிழில்  "கடைசி நொடிகள்" எனும் பெயரில் ரசிமீடியா மேக்கர்ஸ் உருவாக்கியுள்ளனர். விஸ்வசாந்தி பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இப்படத்தில் கொலைகாரனை கண்டுபிடிக்கும் பாரன்ஸிக் ஆபீஸராக டொவீனா தாமஸ் நடித்திருக்கிறார். மேலும் மம்தா மோகன் தாஸ், ரெபா மோனிகா, மோகன் சர்மா, பிரதாப்போத்தன் போன்ற முன்னணி நட்சத்திரங்களுடன் இன்னும் பலரும்  உண்டு.

Forensic movie tamil remake coming soon
             
வரிசையாக  பெண் குழந்தைகள் கொலை செய்யப்படுகின்றனர். அந்த கொலைகளை செய்த கொலைகாரனை பிடிப்பதற்காக போலீஸ் ஒரு சிறப்பு படை அமைக்கிறது. அதில் உதவியாளராக பாரன்ஸிக் ஆபீஸர் ஒருவரும் நியமிக்கப்படுகிறார். கொலைகளும் கொலை நடத்திய விதமும் ஒரே மாதிரி இருப்பதால் கொலைகாரன் ஒருவரே தான் செய்திருக்கனும் என்று அந்த பாரன்ஸிக் ஆபீசர் கண்டுபிடிக்கிறார். கண்டுபிடித்து போலீஸிடம் சொன்னால் அவங்க ஏற்க மறுக்கிறார்கள். 

Forensic movie tamil remake coming soon

மெல்ல மெல்ல அந்த போலீஸ் துறையை நம்ப வைத்து அந்த கொலைகாரனை எப்படி பிடிக்கிறான் என்பது கதை. இப்படத்திற்காக பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம் ஹாலிவுட் தரத்திற்குகொண்டு செல்கிறது. திரில்லர் என்றால் இதுதான் என்று ஒவ்வொரு காட்சிகளும் நெஞ்சை அள்ளிக் கொள்ளும் விதமாக "கடைசி நொடிகள்"  இருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் இந்த படம் தமிழில் வெளியாக உள்ளது.    

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios