For this reason the commander is at the peak - Samantha tells the secret ...

தளபதி விஜய்யுடன் வேலை செய்வது மிகவும் பாதுகாப்பானது. அதனால்தான் அவர் இவ்வளவு பெரிய உச்சத்தை எட்டியுள்ளார் என்று நடிகை சமந்தா தெரிவித்துள்ளார்.

தமிழ் நடிகைகளில் முன்னணி நடிகை சமந்தா. இவருக்கு கடந்த 10-ஆம் தேதி நாகசைத்தன்யாவுடன் திருமணம் நடந்து முடிந்தது.

பல நடிகைகள் திருமணத்துக்கு பின் பெரும்பாலும் நடிப்பதை நிறுத்திவிடுகின்றனர். இதனால் சமந்தாவும் நடிப்பாரா? என்ற கேள்வி எழுந்தது.

இதற்கு விளக்கம் அளித்துள்ளார் சமந்தா,

“திருமணம் ஆனா இப்போ என்ன நடிக்க கூடாதா? உண்மையில் என்னை புரிந்து கொண்ட குடும்பம் கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. அதனால் எனக்கு பிடிக்கும் வரை தொடர்ந்து நடிப்பேன்.

தளபதி விஜய்யுடன் மூன்றாவது முறையாக வேலை செய்ததில் மகிழ்ச்சி. அவர் ஒரு ஜெண்டில்மேன். அவருடன் வேலை செய்வது மிகவும் பாதுகாப்பானது. அதனால் தான் அவர் இவ்வளவு பெரிய உச்சத்தை எட்டியுள்ளார்? என்று சமந்தா தெரிவித்துள்ளார்.