For the first time in the history of Tamil cinema the trailer of the space film is released ...

தமிழ் சினிமா வரலாற்றில் முதன் முறையாக வெளிவரும் விண்வெளிப் படமான ஜெயம் ரவியின் ‘டிக் டிக் டிக்’ படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘டிக் டிக் டிக்’.

மிருதன்’ படத்தின் மூலமாக அனைவரின் கவனத்தையும் தன்பக்கம் ஈர்த்த சக்தி சௌந்தர்ராஜன் இயக்கும் இந்தப் படத்தில் நிவேதா பெத்துராஜ், ஆரோன் அஜீஸ் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தை ஜபக் தயாரித்துள்ளார்.

இப்படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.

அதிக பொருட்செலவில் உருவாகி வரும் த்ரில்லர் மற்றும் சைன்ஸ் பிக்ஷன் படம். இந்தப் படத்திற்காக சென்னையில் பிரம்மாண்டமான அரங்குகள் அமைத்து படப்பிடிப்புகள் நடைபெற்றன.

தமிழ் சினிமா வரலாற்றிலேயே முதன் முறையாக உருவாகி வரும் விண்வெளிப் படம் இது என்பது இதன் சிறப்பு.

இந்த படத்தில் ஜெயம் ரவியின் மகன் ஆரவ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது கொசுறு தகவல்.