கேரளாவில் பெய்துவரும் தொடர் மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அங்குள்ள மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். 50 ஆண்டுகளுக்கு பின் இது போன்ற கன மழை பெய்து வருவதால், கேரளாவில் உள்ள 10 மேற்பட்ட மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் நில சரிவின் காரணமாக, வீடுகள் இடித்து விழும் அவலமும் அரங்கேறி வருகிறது. இதனால் பலர் தங்கள் உடமைகளை இழந்து தவித்து வருகின்றனர். 

இந்நிலையில் திருவன்னதபுரத்தில் உள்ள நடிகர் ப்ரித்திவிராஜின் வீடு முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இதனால் இவர் என்னசெய்வதென்று தெரியாமல் தவித்து வருகிறார். குடும்பத்தினருடன் மேல் தளத்தில் தற்காலிகமாக இருந்த நிலையில். தற்போது அவருடைய குடும்பத்தினரை வெள்ளத்தில் இருந்து பத்திரமாக மீட்டுள்ளனர் சிலர். அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களை வைரலாகி வருகின்றனர்.

கேரள மக்களுக்கு உதவும் நோக்கத்தில், இதுவரை கோலிவுட் திரையுலகை சேர்ந்த பல சினிமா நட்சத்திரங்கள் தங்களால் முடிந்த நிதியை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.