அஜீத் நடித்துள்ள விவேகம் படத்தின் மூன்றாவது சிங்கிள் ட்ராக்கான “காதலாட” நாளை வெளியாகவுள்ளது.

சிறுத்தை சிவா இயக்கத்தில் 3-வது முறையாக இணைந்து அஜித் விவேகம் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்துள்ளார். இவருடன், கமலின் இளைய மகள் அக்ஷராஹாசனும் நடித்துள்ளார்.

இந்த நிலையில், இப்படத்தின் முதல் சிங்கிள் ட்ராக்கான சர்வைவா வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், தலை விடுதலை பாடலும் வெளியாகி வரவேற்பு பெற்றது.

அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தின் மூன்றாவது சிங்கிள் டிராக்கான “காதலாட” நாளை வெளியாக இருக்கிறது என்று இயக்குனர் சிவா தெரிவித்துள்ளார்.

காதலாட என்றுத் தொடங்கும் அந்த பாடல் தல அஜித்திற்கு கபிலன் எழுதிய முதல் பாடல் என்பது கொசுறு தகவல்