இரும்புத்திரை பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் "ஹீரோ".  அப்படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் இன்று சென்னையில் உள்ள சத்யம் திரையரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதில் சிவகார்த்திகேயன், கல்யாணி பிரியதர்ஷன், இயக்குநர் மித்ரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கே.ஜே.ஆர்.ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஆரம்பம் முதலே வேற லெவலில் புரோமோஷன் தரப்பட்டு வருகிறது. இன்று நடைபெற்ற ட்ரெய்லர் ரிலீஸ் பங்கஷனில் கூட கே.ஜே.ஆர். நிறுவனம் தெறிக்கவிட்டிருந்தது.  

சத்யம் திரையரங்கில் "ஹீரோ" படத்தின் மாஸ்க் மற்றும் சிவகார்த்திகேயன் பயன்படுத்தும் 'எச்' சிம்பிள் ஆகியவை பிரம்மாண்டமாக காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. மேலும் சத்யம் தியேட்டர் நுழைவு வாயிலில் ஹீரோ பட போஸ்டர்களுடன் கூடிய டிஜிட்டர் எண்ட்ரன்ஸ் வைக்கப்பட்டிருந்தது.

 

"ஹீரோ" படத்தின் ஷூட்டிங் முடிந்த கையோடு போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகளை விட புரோமோஷன் பணிகளில் கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் அதிக கவனம் செலுத்தி வருகிறது. சிவகார்த்திகேயன் ரசிகர்களை கவரும் வகையில் விதவிதமான போஸ்டர்கள் ரிலீஸ் செய்யப்பட்டு, அவை சோசியல் மீடியாவில் வைரலானது. இதையடுத்து சத்யம் தியேட்டர் வாசலில் ஹீரோ கெட்டப்பில் உள்ள சிவகார்த்திகேயனின் மிகப்பெரிய பேனர், ரயில் முழுவதும் ஹீரோ படத்தின் வண்ணமயமான போஸ்டர் என கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ், புரோமோஷனில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கே டப் கொடுத்தது. 

 

மேலும் ஹீரோ படத்திற்காக மற்றொரு மாஸ் புரோமோஷன் செய்யப்பட்டது. அதுதான் இப்போதைய இளம் தலைமுறையை ஆட்டிப்படைத்திருக்கும் வீடியோ கேம். எனவே தமிழ் சினிமாவில் எந்த படத்திற்கும் இல்லாத அளவிற்கு ஏ.ஆர். கேம் முறையில் "ஹீரோ கேம்" வெளியிடப்பட்டது. மேலும் PlayHero என்ற போட்டியும் நடத்தப்பட்டது. இதில் ஏராளமான சிவகார்த்திகேயன் ஃபேன்ஸ் பங்கேற்றனர்.

இதையும் படிங்க: தல ரசிகர்களுக்கு "விஸ்வாசம்"னா.. சிவகார்த்திகேயன் ஃபேன்ஸ்க்கு "ஹீரோ"... தயாரிப்பாளர் சொன்ன தகவல்...!

அந்த வீடியோ கேமில் ஜெயித்த ஈரோட்டைச் சேர்ந்த கோகுல் என்பவர் தான் "ஹீரோ" படத்தின் ட்ரெய்லரை வெளியிட்டார். பிரபல ஹீரோ ஒருவரின் மாஸ் பட ட்ரெய்லரை ரசிகர் ஒருவர் வெளியிடுவது என்பது இதுவே முதல் முறை. ரசிகர்களுக்கு மிகவும் மதிப்பளிக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தையே, அந்த விஷயத்தில் சிவகார்த்திகேயன் மிஞ்சிவிட்டார் என அவரது ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர். மேலும் செம்ம ஹாப்பியில் உள்ள  எஸ்.கே.புள்ளிங்கோ #HeroTrailerLaunch என்ற ஹேஷ்டேக்கை இந்திய அளவில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.