தன்னைத் தானே சூப்பர் மாடல் என சொல்லிக்கொள்ளும் மீரா மிதுன் தொடர்ந்து தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர்களாக திரையுலகில் நுழைந்து இன்று முன்னணி நடிகராக இருக்கும், விஜய் மற்றும் சூர்யா குறித்து விமர்சித்து பேசி வருகிறார். லாக்டவுன் நேரத்தில் விளம்பரத்திற்காக பேசி வருகிறார் என முதலில் யாரும் இவரை கண்டுகொள்ளாமல் இருந்தனர். ஆனால் மீரா மிதுனின் அட்டகாசம் அதிகமாகி போய், சூர்யாவிற்கு நடிப்பு என்ற வார்த்தைக்கு ஸ்பெல்லிங் கூட தெரியாது என வரம்பு மீறி பேசி ரசிகர்களை ஆத்திரத்தை அதிகரித்தார். 

 

இதனால் கடுப்பான ரசிகர்கள் மீரா மிதுனுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக விஜய் - சூர்யா ரசிகர்கள் பச்சை பச்சையாய் திட்டி கமெண்ட் போட ஆரம்பித்தனர். வாயால் சொல்ல முடியாத அளவிற்கு அர்ச்சனைகளை வாங்கினாலும் மீரா மிதுன் அடங்கியதாக தெரியவில்லை. என்னை இப்படி கெட்ட, கெட்ட வார்த்தைகளில் திட்டுறீங்களே... விஜய் பொண்டாட்டி சங்கீதாவைவும், சூர்யா பொண்டாட்டி ஜோதிகாவையும் அந்த வார்த்தைகளை சொல்லி நான் கூப்பிட்டால்  சும்மா இருப்பீங்களா? என எல்லை மீறி அசிங்கமாக பேசிய வீடியோ ஒன்றை வெளியிட்டார். இதனால் கொதிப்பதிடைந்த விஜய், சூர்யா ரசிகர்கள் மீரா மிதுனை விளாசிக்கொண்டிருக்கிறார்கள். சில விஜய் ரசிகர்கள் மீரா மிதுனை திட்டி வீடியோ வெளியிட்டு வருகின்றனர். 

 

 

இந்நிலையில் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்ட இயக்குநர் பாரதிராஜா, "அழகிய ஓவியத்தின்‌ மீது சேறடிப்பது போல மீராமிதுன்‌ என்கிற பெண்‌ தன்‌ வார்த்தைகளை கடிவாளம்‌ போடாமல்‌ வரம்புமீறி சிதறியுள்ளார்‌. திரையுலகில்‌ பயணிக்கும்‌ ஒரு மூத்த உறுப்பினராக நான்‌ இதைக்‌ கண்டிக்க கடமைப்பட்டுள்ளேன்‌. சிறு பெண்‌, பக்குவமில்லாமல்‌ புகழ்‌ வெளிச்சம்‌ தேடிப்‌ பேசுவதை இத்தோடு நிறுத்திக்‌ கொள்ள வேண்டும்‌. கவுரமாக வாழும்‌ கலைஞர்களின்‌ குடும்பத்தைப்‌ பற்றி அவதூறு பேசுவதை சினிமா கலைஞர்கள்‌, துறை சார்ந்தவர்கள்‌ வேடிக்கைப்‌ பார்த்துக்‌ கொண்டிருக்கமாட்டார்கள்‌. இதுவரை பேசியதை வன்மையாகக்‌ கண்டிக்கிறேன்‌" என குறிப்பிட்டிருந்தார்.

 

 

நீண்ட நாட்களாக நீடித்து வரும் இந்த பிரச்சனை குறித்து தளபதி விஜய் அமைதி காத்து வரும் நிலையில், நடிகர் சூர்யா முதன் முறையாக மீரா மிதுனுக்கு சூசமாக பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், "எனது தம்பி தங்கைகளின் நேரமும், சக்தியும் ஆக்கப்பூர்வமான செயல்களுக்குப் பயன்பட வேண்டும் என்பதே என் விருப்பம். இயக்குனர் இமயம் திருமிகு. பாரதிராஜா அவர்களுக்கு என் உளப்பூர்வமான நன்றிகள்.. " என பதிவிட்டுள்ளார். அத்துடன் 2018ம் ஆண்டு பதிவிட்ட, "தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு எதிர்வினையாற்றி நம் தரத்தை நாம் குறைத்துகொள்ள வேண்டாம். உங்களின் நேரத்தையும், சக்தியையும் பயனுள்ள செயல்களுக்கு செலவிடுங்கள். சமூகம் பயன் பெற" என்ற ட்வீட்டையும் இணைந்துள்ளார். இதற்கு சூர்யா ரசிகர்கள் பலரும் அவருடை கருத்தை பின்பற்றுவதாக தெரிவித்து வருகின்றனர்.