நடிகை காஜல் அகர்வால் நடிப்பில் கடைசியாக, இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில், ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்த 'கோமாளி' திரைப்படம் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது.

நடிகை காஜல் அகர்வால் நடிப்பில் கடைசியாக, இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில், ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்த 'கோமாளி' திரைப்படம் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது.

இந்த படத்தை தொடந்து, காஜல் மிகவும் எதிர்பார்த்து கொண்டிருக்கும் திரைப்படம் 'பாரிஸ் பாரிஸ்'. நடிகை கங்கனா ரணாவத் நடிப்பில் பாலிவுட் திரையில் வெளியாகி, கங்கனாவிற்கு தேசிய விருதை பெற்று கொடுத்த 'குயின்' படத்தின் ரீமேக்காக இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த படம் ரிலீஸ் ஆகும் என தெரிகிறது.

இந்த படத்தை தொடர்ந்து, தெலுங்கு மற்றும் ஆங்கிலத்தில் உருவாகி வரும் ஒரு படம், ஹிந்தியில் ஒரு படம், மற்றும் தமிழில் நடிகர் கமலஹாசனுக்கு ஜோடியாக 'இந்தியன் 2 ' ஆகிய படங்கள் இவரின் கைவசம் உள்ளது.

இந்நிலையில், நடிகை காஜல் அகர்வாலுக்கு சிங்கப்பூரில் அமைந்துள்ள மேடம் டுசாட்ஸில், மெழுகு சிலை வைக்கப்பட உள்ளது. இது குறித்த சில புகைப்படங்களை காஜல் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த சிலை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 5 ஆம் தேதி திறக்கப்பட உள்ளது.

Scroll to load tweet…

மேலும், தென்னிந்திய நடிகைகளில் நடிகை காஜல் அகர்வாலுக்கு தான் முதல் முதலில் மேடம் டுசாட்ஸில் மெழுகு சிலை வைக்கப்பட உள்ளது. இதற்கு காஜல் அகர்வாலின் ரசிகர்கள் பலர் தங்களுடைய வாழ்த்தை தெரிவித்து வருகிறார்கள்.