பாலாவின் “நாச்சியார்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு; ஜோதிகா போலீஸா…

ஜிவி பிரகாஷ், ஜோதிகா நடிக்கும் நாச்சியார் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது.

தாரை தப்பட்டை படத்தைத் தொடர்ந்து இயக்குனர் பாலா இயக்கும் படம் நாச்சியார். இப்படத்தில் ஜிவி பிரகாஷ், ஜோதிகா ஆகியோர் நடிக்கின்றனர்.

சில வாரங்களுக்கு முன் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது.

சூர்யா வெளியிட்ட இந்த போஸ்டரில் ஜோதிகா மட்டுமே இருக்கிறார். பாலாவின் படத்தில் நடிகர், நடிகையின் கதாபாத்திரத்தை வெறும் புகைப்படத்தை வைத்து புரிந்து கொள்வது என்பது மிக கடினம்.

இதில், ஜோதிகா காவல்துறை அதிகாரியாகவும், ஜிவி பிரகாஷ் கிரிமினலாகவும் நடிக்கலாம் என்று சிலர் இப்போதே யூகிக்கத் தொடங்கி விட்டனர்.

இப்படத்தில் இளையராஜா இசையமைப்பதன் மூலமாகவும், பாலா மற்றும் இளையராஜா இருவரும் 5-வது முறையாக இணைந்துள்ளனர்.

இப்படத்தை பாலாவின் தயாரிப்பு நிறுவனமான பி ஸ்டுடியோஸ் மற்றும் ஈஓஎன் ஸ்டூடியோஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றது.