இடிமுழக்கம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை  உதயநிதி ஸ்டாலின் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டார். 

இசையமைப்பாளர் மற்றும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் குமார், காயத்ரி ஷங்கர் நடிப்பில் இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ இடிமுழக்கம் ’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகரும், அரசியல்வாதியுமான உதயநிதி ஸ்டாலின் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டார். ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் ஜி.வி.பிரகாஷ் கிராமப்புற தோற்றத்தில் லுங்கி மற்றும் சட்டையுடன் கையில் கத்தியை ஏந்தியவாறு ஆட்டிறைச்சி கடை மற்றும் பைக்கில் நிற்கிறார்.

Scroll to load tweet…

ஸ்கைமேன் பிலிம்ஸ் சார்பில் கலைமகன் முபாரக் தயாரித்துள்ள இப்படம், மதுரை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. ஜி.வி ஒரு கிராமப்புற இடத்தில் இறைச்சி கடை உரிமையாளராக நடிக்கும் அதே வேளையில், இப்படத்திற்காக மூன்று வித்தியாசமான தோற்றங்களில் நடிக்க, காயத்ரி செவிலியராக நடிக்கிறார்.

நடிகர்கள் அருள்தாஸ் மற்றும் சௌந்தர் ஆகியோரும் படத்தின் நட்சத்திரக் குழுவில் உள்ளனர். இப்படத்திற்கு என்.ஆர்.ரகுநாதன் இசையமைக்க, வைரமுத்து பாடல்கள் எழுத, ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' புகழ் காயத்ரி நடிக்கிறார்.

ஜிவி பிரகாஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான ஜெயில் அதற்கு முன்னாள் வெளியான பேச்சுலர் உள்ளிட்ட படங்கள் போதுமான வரவேற்பை பெறவில்லை. இதையடுத்து தற்போது செல்ஃபி , ஐங்காரன், டிராப் சிட்டி, இடிமுழக்கம், பெயரிடப்படாத ஜிவி 13 உள்ளிட்ட படங்களை தன கைவசம் வைத்துள்ளார்.