என்னதான் தன்னிடமிருந்து விவாகரத்து பெற்றிருந்தாலும், அதே மனைவி இன்னொருவரைத் திருமணம்போது மனசு கிடந்து துடிக்கத்தானே செய்யும்? ஆனால் கேரள நடிகர் ஒருவர் தனது மனைவியின் இரண்டாவது மனைவியின் இரண்டாவது திருமணத்தை, ‘செத்தாண்டா சேகரு’ என்ற மகிழ்ச்சியுடன்  கேக் வெட்டிக்கொண்டாடியிருக்கிறார். அந்த கேக்கில் ‘ஆல் த பெஸ்ட் [அதாவது செத்தாண்டா லோயல்] என்று எழுதப்பட்டிருந்தது.

.மலையாள டிவி தொடர்களில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் அம்பிளி தேவி. மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர், ஏராளமான மலையாள படங்களிலும் நடித்துள்ளார். கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் இவர் லோவல் என்ற டிவி நடிகரை திருமணம் செய்தார். இவர்களுக்கு 6 வயதில் ஒரு மகன் இருக்கிறான். கடந்த வாரம் அம்பிளி தேவி, திடீரென ஜெயன் ஆதித்தியன் என்ற மற்றொரு டிவி நடிகரை திருமணம் செய்தார். கொல்லத்தில் ஒரு கோயிலில் இந்த திருமணம் நடந்தது. 

இந்த திருமணம் குறித்த தகவல் வெளியான பிறகுதான் அம்பிளி தேவி, தனது கணவர் லோவலை கடந்த சில வாரங்களுக்கு முன் விவாகரத்து செய்தது வெளியே தெரியவந்தது. ஒரு டிவி தொடர் படப்பிடிப்பில் லோவல், இருந்தபோது தான் தனது முன்னாள் மனைவிக்கு இரண்டாவது திருமணம் நடந்தது தெரிய வந்தது. உடனே பயங்கர உற்சாகமான அவர்  படப்பிடிப்பு தளத்தில் வைத்து கேக் வெட்டி முதல் மனைவியின் திருமணத்தைக் கொண்டாடி முகநூலில் பதிவிட்டார்.

இது தொடர்பாக பேஸ்புக்கில் லைவிலும் தோன்றி, தனது தொல்லை ஒழிந்தது எனறு கூறினார். சக நடிகர்களுக்கு இனிப்பும் வழங்கினார்.முதல் மனைவியின் இரண்டாது திருமணத்தை நடிகர் கேக் வெட்டி கொண்டாடியது சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதுகுறித்து அறிந்த அம்பிளி தேவி முதல் கணவர் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். ‘‘என்னை லோவல் கொடுமைப்படுத்தியதால் தான் நான் அவரை விட்டு பிரிந்தேன். என்னிடமும் மகனிடமும் அன்பாக லோவல் நடந்தது கிடையாது’’ என்று அவர் கூறினார்.