Rolex suriya : ரோலெக்ஸ் கதாபாத்திரம் எண்ட்ரியான போது காலாப்பட்டில் உள்ள ஜெயா திரையரங்கில் திரை தீப்பிடித்த சம்பவம் தான் தற்போது சோசியல் மீடியாவில் ஹாட் டாப்பிக்காக உள்ளது. 

சினிமாவில் படத்துக்காக போடப்படும் பாடல்கள் சில சமயங்களில் நிஜத்திலும் ஒத்துப்போகும். அத்தகைய தருணம் தான் தற்போது பாண்டிச்சேரியில் அரங்கேறி உள்ளது. பீஸ்ட் படத்தில் இடம்பெறும் ‘பீஸ்ட் மோடு’ என்கிற பாடலில் ‘திரை தீப்பிடிக்கும்... வெடி வெடிக்கும்.. ஒருத்தன் வந்தா கொல நடுங்கும்’ என்கிற பாடல் வரிகள் இடம்பெற்று இருக்கும்.

அந்த வரிகளுக்கு ஏற்றார் போல் ஒரு சம்பவம் தான் தற்போது நடந்துள்ளது. பாண்டிச்சேரியை அடுத்த காலாப்பட்டில் உள்ள ஜெயா திரையரங்கில் கமல்ஹாசன் நடித்துள்ள விக்ரம் படம் திரையிடப்பட்டு இருந்தது. அந்த படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் நடிகர் சூர்யா ரோலெக்ஸ் என்கிற கதாபாத்திரத்தில் வந்து மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.

Scroll to load tweet…

அந்த ரோலெக்ஸ் கதாபாத்திரம் எண்ட்ரியான போது காலாப்பட்டில் உள்ள ஜெயா திரையரங்கில் திரை தீப்பிடித்த சம்பவம் தான் தற்போது சோசியல் மீடியாவில் ஹாட் டாப்பிக்காக உள்ளது. திடீரென திரை தீப்பிடித்ததை பார்த்த மக்கள் அலறி அடித்து ஓடும் காட்சிகளும் அந்த வீடியோவில் இடம்பெற்று உள்ளன.

இதுகுறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக திரை தீப்பிடித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சிலரோ பீஸ்ட் பட பாடலை பின்னணியில் போட்டு டிரெண்டாக்கி வருகின்றனர்.

இதையும் படியுங்கள்.... Nayanthara wedding : காதல் டூ கல்யாணம்... விக்கி - நயனின் காதல் கடந்து வந்த பாதை...!