fire accident in kamalhassan home

சென்னை ஆழ்வார்பேட்டையிலுள்ள நடிகர் கமல்ஹாசன் வீட்டில் நேற்று நள்ளிரவு திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இதில் கமலஹாசன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

சென்னை ஆழ்வார்பேட்டையிலுள்ள நடிகர் கமல்ஹாசன் வீட்டில், நள்ளிரவில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது. வீட்டின் மூன்றாவது மாடியில் இருந்த கமல், புகைமூட்டத்திற்கு நடுவே படி வழியாக இறங்கி வெளியேறினார். அங்கிருந்த ஊழியர்களும் கமலஹாசனை பத்திரமாக மீட்டனர்.

இவ்விபத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை எனவும், தான் பாதுகாப்பாக இருப்பதாகவும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில்,எனது வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது…நான் பாதுகாப்பாக இருக்கிறேன்…யாருக்கும் பாதிப்பு இல்லை…என்மீது அக்கறை காட்டிய ஊழியர்களுக்கு நன்றி என பதிவிட்டுள்ளார்