finally malar teacher fulfills the desire of Tamil fans
சாய் பல்லவி நடிப்பில் உருவாகி வரும் ‘கரு’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிட்டு தமிழ் ரசிகர்களின் ஆசையை நிறைவேற்றியுள்ளார்.
மலையாளத்தில் ’பிரேமம்’ படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் சாய் பல்லவி.
இதைத் தொடர்ந்து ’ஃபிடா’ என்ற தெலுங்கு படத்தில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.
தமிழகத்தைச் சேர்ந்த சாய் பல்லவி, தமிழ் திரைப்படத்தில் நடிக்காதது ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றமாகவே இருந்தது.
இந்த நிலையில் இயக்குநர் விஜய் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் சாய் பல்லவி ஒப்பந்தமாகியுள்ளார். அதற்கு ‘கரு’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இதனை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.
கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் வகையில் உருவாகி வருகிறது.
’கரு’ படத்தில் தெலுங்கு நடிகர் நாகா சௌர்யா கதாநாயகனாக நடிக்கிறார்.
கரு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் பிரபுதேவா தனது டிவிட்டர் சமூகவலைத்தளம் மூலம் வெளியிட்டார்.
சாய் பல்லவி நடிக்கும் முதல் தமிழ் படம் என்பதால், ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
இப்படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகிறதாம்.
