கற்பழிப்பு வழக்கில் தன் மீது புகார் சுமத்திய நடிகை தன்னிடம் 6 கோடி பணம் கேட்டு பிளாக் மெயில் செய்த ஆடியோவை நீதிபதி முன்னிலையில் சமர்ப்பித்ததைத் தொடர்ந்து அவர் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார்.

கேரள முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரான வைஷக் ராஜன் தனது வைஷாகி புரடக்‌ஷன்ஸ் நிறுவனத்தில் இதுவரை ‘பத்மஸ்ரீ டாக்டர் சரோஜ் குமார்(2012), வெல்கம் டூ சென்ட்ரல் ஜெயில்(2016), சங்க்ஸ்(2017), ரோல் மாடல்ஸ்(2017) ஆகிய படங்களை தயாரித்துள்ளார். தற்போது ‘ஜானி ஜானி யெஸ் பாபா’ படத்தையும் தயாரித்து வருகிறார்.மாடல் அழகியும், வளர்ந்து வரும் நடிகையுமான  ஒரு இளம் பெண்ணிடம்   தனது படத்தில் முக்கிய கேரக்டர் இருப்பதாகவும் அது குறித்து டிஸ்கஸ் பண்ண தனது அபார்ட்மெண்ட்டுக்கு வரும்படியும்  தயாரிப்பாளர் வைஷக் ராஜன் அழைத்து கற்பழித்ததாகவும் எர்ணாகுளம் வடக்கு காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டு அவர் மீது 4 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர்.அந்த வழக்கு எர்ணாகுளம் செஷன்ஸ் கோர்டுக்கு வந்த நிலையில் தயாரிப்பாளர் வைஷாக் ராஜன் தரப்பில், அந்த நடிகைக்கும் வைஷாக் ராஜனுக்கும் சுமார் 18 மாதங்களுக்கும் மேலாக இருந்த தொடர்பு, அவர்களது தொலைபேசி உரையாடல்கள், வாட்ஸ் அப் பரிவர்த்தனைகள் மற்றும் கற்பழிப்பு வழக்கை வாபஸ் பெற ஆறு கோடி பணம் கேட்ட போன் உரையாடல் அனைத்தும் ஒப்படைக்கப்பட்டன. அந்த ஆதாரங்களை விசாரணைக்கு உட்படுத்த உத்தரவிட்ட நீதிபதி தயாரிப்பாளர் வைஷாக் ராஜனுக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.