சினிமா துறையில் கதைகளை திருடுவது, அப்படியே காப்பியடிப்பது  அதிகமாகி விட்டது அது தொடர்பான புகார்கள் அதிகமாக வருகிறது என நடிகர் பாக்கிய ராஜ் வேதனைதெரிவித்துள்ளார்.சென்னையில் நடைபெற்ற திரைப்பட இசைவெளியீட்டு விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர் இப்படி பேசியிருக்கிறார். இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸை நினைவில் வைத்துத்தான் இப்படி பேசினார் என பரபரப்பாக பேசப்பட்டுவருகிறது. 

நடிகர் ஹாரி நடிகை ஷால்வி பாலா அகியோர் இணைந்து நடிக்கும் எல்லாம் மேல இருக்கிறவன் பாத்துப்பான் என்ற திரைப்படத்தின்  இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது, இப்படத்தை அறிமுக இயக்குனர் கவின்ராஜ் என்பவர் இயக்கியிருக்கிறார், அந்த நிகழ்ச்சியில் திரைப்பட இயக்குனரும் நடிகருமான கே. பக்கியராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து  கொண்டு படத்தின் பாடல்களை வெளியிட்டார் பின்னர் மேடையில் பேசிய அவர். வேற்றுகிரக மனிதர்களை மையமாக கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டிருப்பதாக அறிகிறேன், நீங்கள் புதுமுக இயக்குனராக இருக்கிறீர்கள் என்று படத்தின் இயக்குனர் கவின்ராஜை குறிப்பிட்ட அவர், படத்தின் தலைப்புக்கு ஏற்ப  எல்லாம் மேலே இருக்கிறவன் பார்த்துக்கொள்வான் என்று நாங்கள் இருந்துவிட வேண்டாம்,

கதைகள் திருடப்படுவதும், அப்படியே காப்பியடிக்கப்படுவதும் சினிமாவில் அதிகமாகி விட்டது, எனவே கவனமாக இருங்கள் என்று இயக்குனருக்கு அட்வைஸ் கூறினார்.  சந்தனக்கடத்தல் வீரப்பனைப்பற்றி யார் வேண்டுமானால் படமெடுக்கலாம் ஆனால் ஒருவர் எடுத்த பிறகு இந்த கதையை அப்படியே காப்பியடிப்பதுதான் தவறானது என்றார். கடந்தாண்டு விஜய் நடிப்பில் வெளியான சர்கார் படத்தின் கதை செங்கோல் என்ற தலைப்பில் தான் எழுதியது என்றும்,  

தன்னுடைய கதையை இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் திருடி சர்கார் என்ற பெயரில் படமெடுத்துள்ளார் என வருண் ரேஜேந்திரன் என்பவர் , அப்போது தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் தலைவராக இருந்த பாக்கியராஜிடம் புகார் தெரிவித்திருந்தார், அந்த சம்பவத்தை நினைவில் வைத்துதான்  ஏ.ஆர் முருகதாஸை குத்திக்காட்டி பாக்கியராஜ் பேசியுள்ளார் என்று பரபரப்பாக பேசப்படுகிறது.