பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கான காரணம் என்ன என்பது குறித்து இயக்குனர் சேரன் நீண்ட நாட்களுக்குப் பின்னர் மௌனம் கலைந்துள்ளார். அவர் கூறியுள்ள விளக்கம் அவரது அபிமானிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  நடந்து முடிந்த பிக் பாஸ் சீசன்-3ல்  பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டனர் அதில் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வந்த சேரனும் பங்கேற்றார்.  அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றது குறித்து அவருக்கு ஆதரவாகவும் எதிராகவும் பல்வேறு  விமர்சனங்கள் அப்போது எழுப்பியது.  போட்டியின் இடையில் சக போட்டியாளர் மீரா மிதுன் சேரன் மீது வைத்த  புகார் சேரனுக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியது. பின்னர் குறும்படம் மூலம்  உண்மை என்ன என்பது அனைவருக்கும் தெரிந்தது. 

ஏற்கனவே சேரன் மீது சாஃப்டு கார்னரில் இருந்த பிக்பாஸ் ரசிகர்கள் மத்தியில் அதன் பின்னர் சேரனுக்கு ஆதரவு பெருகியது.  அவர் இறுதிப் போட்டி வரை செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் லாஸ்லியா உடன் தந்தை மகள் உறவு பாராட்டி அதில் தேவையில்லாத வெறுப்பை சம்பாதித்து கொண்டதின் விளைவாக  அவர் பாதியிலேயே போட்டியிலிருந்து  வெளியேறும் சூழல் ஏற்பட்டது.  இந்நிலையில் தரமான திரைப்படங்களை இயக்கி மக்கள் மத்தியில் நல்ல பெயர் எடுத்த சேரனுக்கு ஏன் இந்த வேண்டாத வேலை என்று பலர் விமர்சித்தனர். இந்நிலையில் அதற்கெல்லாம் பதிலடி கொடுக்கும் வகையில் சேரன் மனம் திறந்து பேசியுள்ளார். அதில், 

கடந்த நான்கு ஆண்டுகளாக எந்த பட வாய்ப்பும் இல்லை மோசமான சூழலில் நான்  இருந்தேன். யாரும்  என்னை படம் இயக்க அணுகவில்லை,  சும்மாவே வீட்டில் இருந்தால் யார் சோறுபோடுவார்கள். என்பதினால்தான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன் என கூறியுள்ளார்.  இது சேரனின் அபிமானிகள் மத்தியில் மட்டுமல்ல திரை ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.  அடுத்ததாக சேரன் விஜய் சேதுபதியை வைத்து படம் ஒன்றை இயக்க உள்ளார். அதற்கான முதற்கட்ட பணிகள் தற்போது நடந்து வருவது குறிக்கத்தக்கது.