fight together for cinema jayam ravi advise to Vijay and Ajith...

ஜிஎஸ்டி வரிக்கு எதிராக நடிகர்கள் விஜய், அஜித் குரல் கொடுக்கவில்லை என்று கேட்ட ஜெயம் ரவி, திரையுலகிற்கு பிரச்சனை ஏற்பட்டால் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்று அறிவுரை கூறியுள்ளார்.

நாடு முழுவதும் ஒரே சீரான வரி விதிக்கும் வகையில் ஜிஎஸ்டி எனும் சரக்கு மற்றும் சேவை வரி சட்டம் அமலுக்கு வந்துள்ளது. இதனால் கடுமையான விலை உயர்வு ஏற்பட்டுள்ளது என்பதை யாராலும் மறுக்க முடியாது.

திரையரங்குகளில் சினிமா டிக்கெட் விலை உயர்வு அதிலும் சினிமா தியேட்டர்களுக்கு 28 சதவீதம் வரி விதித்துள்ளது மத்திய அரசு. இத்துடன் தமிழக அரசு கேளிக்கை வரியாக 30 சதவீதம் விதித்துள்ளது. இதனால் தியேட்டர்களில் டிக்கெட் கட்டணம் 58 சதவீதம் உயர்ந்துள்ளது.

இந்த வரி விதிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழகம் முழுவதும் தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டன.

இந்த நிலையில் ஜிஎஸ்டி வரிக்கு எதிராக நடிகர்கள் விஜய், அஜித் குரல் கொடுக்காதது வருத்தம் அளிப்பதாக நடிகர் ஜெயம் ரவி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஜெயம் ரவி பேசியது: “ஜி.எஸ்.டி வரிவிதிப்பால் தமிழ் திரைத்துறைக்கு மிகுந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக திரையரங்கு உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விஜய், அஜித் போன்ற பிரபல நடிகர்கள் ஜி.எஸ்.டிக்கு எதிராக குரல் கொடுக்கவில்லை. திரையுலகிற்கு பிரச்சனை ஏற்பட்டால் ஒற்றுமையாக செயல்பட வேண்டும். தமிழ் திரை உலகினரிடையே ஒற்றுமை இல்லை” என்றார் அவர் .