பாலாஜி, நித்யா சண்டை…! பிக் பாஸுக்கே பணம் தருவதாக சொன்ன போட்டியாளர்…!
பிக் பாஸ் நிகழ்ச்சியில், விஜய் டிவி மூலம் பிரபலமடைந்த காமெடி நடிகர் பாலாஜியும், அவரது மனைவி நித்யாவும், போட்டியாளர்களாக பங்கேற்றிருக்கின்றனர். இந்த இருவரும் சில பல காரணங்களால் தற்போது பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
சமீப காலமாக இவர்களின் பிரிவு குறித்து பல செய்திகள் இணையத்தில் வைரலாகி இருந்தது. போலீஸ், விசாராணை என்று மிகப்பெரிய சர்ச்சைகளுக்கு பிறகு, இப்போது இவர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் ஒன்றாக நுழைந்திருக்கின்றனர் . ஆனால் தனித்தனி நபராக.
இந்த நிகழ்ச்சியின் மூலம் தன் மனைவியுடன் இணைய வேண்டும் என்பது தான், தனது எண்ணம் என்று பாலாஜி கூறி இருக்கிறார். ஆனால் நித்யாவிற்கு அப்படி எந்த எண்ணமும் இல்லை. இப்படி முரணான எண்ணங்களுடன் இருக்கும் இந்த இருவருக்கும் இடையே, அடிக்கடி சண்டை நடக்க வாய்ப்பிருக்கிறது என்ற எதிர்பார்பில் தான், இந்த இருவரையும் உள்ளே அனுப்பியது பிக் பாஸ் குழு.
அந்த எதிர் பார்ப்பு இப்போது நிறைவேறி இருக்கிறது. இன்று வெளியாகி இருக்கும் பிக் பாஸின் லேட்டஸ்ட் பிரமோவில், சமையல் வேலையில் ஈடுபட்டிருக்கும் போது, பாலாஜிக்கும் அவரது மனைவிக்கும் இடையே சண்டை ஏற்படுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருக்கிறது.
சமையலில் ஈடுபட்டிருந்த நித்யாவிடம் பாலாஜி வெங்காயம் போடுவது பற்றி கேட்கிறார். இதனால் நித்யா அந்த இடத்தை விட்டு நகர்கிறார். சமையலை தொடரவும் இல்லை. இதனால் மும்தாஜ் நித்யாவிடம் உங்க தனிப்பட்ட பிரச்சனையை இப்படி இங்கே காட்டாதீங்க…! இதனால மத்தவங்க பாதிக்க படுறாங்க…! என கூறுகிறார்.
இதனிடையே டேனியல் ஜனனி ஐயருடன் சேர்ந்து, ”பிக் பாஸ் வீட்டில் சண்டை, அதனால சாப்பாடு கிடைக்குமானு தெரியல, ஹோட்டலில் இருந்து வாங்கி அனுப்புங்க. நான் வெளிய வந்து பணம் தரேன். என பிக் பாஸையே வேலை வாங்க பார்க்கிறார். இந்த பிரச்சனைக்கு, பிக்பாஸ் பஞ்சாயத்து செய்வது தான் இன்றைய நிகழ்ச்சியின் ஹைலைட்டா? என நிகழ்ச்சியை பார்த்தால் தான் தெரியும்.