Asianet News TamilAsianet News Tamil

பாரதிராஜாவை ராஜினாமா செய்ய வைத்த கறுப்பு ஆடுகளே...சூடுபிடிக்கும் இயக்குநர் சங்கத்தேர்தல்...

இன்னும் இரு வாரங்களில் இயக்குநர் சங்கத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் ‘இயக்குநர் சங்கத்திலுள்ள கறுப்பு ஆடுகளை வெளியேற்றுங்கள்’என்ற கோஷங்களுடன் உதவி இயக்குநர்களும் இணை இயக்குநர்களும் கோஷம் எழுப்ப ஆரம்பித்துள்ளனர்.

fight in director union election
Author
Chennai, First Published Jul 5, 2019, 10:16 AM IST

இன்னும் இரு வாரங்களில் இயக்குநர் சங்கத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் ‘இயக்குநர் சங்கத்திலுள்ள கறுப்பு ஆடுகளை வெளியேற்றுங்கள்’என்ற கோஷங்களுடன் உதவி இயக்குநர்களும் இணை இயக்குநர்களும் கோஷம் எழுப்ப ஆரம்பித்துள்ளனர்.fight in director union election

கடந்த ஜூன் 10 ஆம் தேதி நடைபெற்ற இயக்குநர்கள் சங்கத்தின் 99ஆவது பொதுக்குழு கூட்டத்தில் பாரதிராஜா, சங்கத்தின் தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனால் சங்கத்தின் மற்ற பதவிகளுக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி ஜூலை 14ஆம் தேதி காலை 7 மணி முதல் 4 மணி வரை இயக்குநர் சங்கத் தேர்தல் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அடுத்து நடந்த சில அரசியல் நகர்வுகளால் பாரதிராஜாவின் தேர்வு விமர்சிக்கப்படவே அவர் பெருங்கோபத்தோடு தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இந்த நிலையில் தற்போது இயக்குநர் சங்க தேர்தல் நடைபெறும் தேதி திடீரென மாற்றப்பட்டுள்ளது. இயக்குநர் சங்க தேர்தல் ஜூலை 14ஆம் தேதிக்கு பதில் ஜூலை 21ஆம் தஅறிஅடுத்த இயங்கத் தலைவராக யார் போட்டியிடுவார் என்ற கேள்விகளும் எழுந்துள்ளது. குறிப்பாக இயக்குநர் பாரதிராஜா பதவி விலகும் போது,‘தேர்தலில் போட்டிடாமல் ஒரு தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டால் அதனால் ஏற்படும் சங்கடங்களை நான் நன்கு உணர்ந்துள்ளேன். ஆகையால் ஜனநாயக முறைப்படி தலைவரை தேர்ந்தெடுக்க வசதியாக எனது தலைவர் பதவியை ராஜினாமா செய்ய முன்வந்துள்ளேன்’எனக்கூறி ராஜினாமா செய்தார். fight in director union election

அப்படி பாரதிராஜா ராஜினாமா செய்த பிறகு இயக்குநர் சங்கத்தில் தொடர்ந்து பெரும் சலசலப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் நேற்று (ஜூலை 4) இணை இயக்குநர்கள் சிலர் தேனாம்பேட்டையில் உள்ள பாராதிராஜாவின் அலுவலகத்தில் அவரைச் சந்தித்து கடிதம் அளித்தனர். தலைவர் பதவியை மீண்டும் பாரதிராஜா ஏற்க வலியுறுத்தினர்.அப்போது அவர்கள் கைகளில் ‘சங்கத்தில் உள்ள கறுப்பு ஆடுகள் யார் என அடையாளம் காட்டுங்கள், நீங்கள் ராஜினாமா செய்யக் காரணமானவர்கள் யார்?’ என்ற கேள்விகள் அடங்கிய அட்டைகள் இடம்பெற்றிருந்தன. மிகவிரைவில் இயக்குநர் சங்கத்தின் முன்னாலும் போராட்டம் நடத்த அவர்கள் முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios