Asianet News TamilAsianet News Tamil

இந்த G Squad துவங்கப்பட்டது ஏன்? Fight Club பட டீசர் லான்ச் நிகழ்ச்சி - மேடையில் எமோஷனலான லோகேஷ் கனகராஜ்!

Director Lokesh Kanagaraj : இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மிக குறுகிய காலகட்டத்தில், தனக்கென தனி அந்தஸ்தை தமிழ் சினிமாவில் பெற்றுள்ளார் என்றால் அதற்கு முழு காரணம் அவருடைய உழைப்பு என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

Fight Club Movie Teaser Launch Function Director Lokesh Kanagaraj Emotional Speech ans
Author
First Published Dec 3, 2023, 8:12 AM IST

தமிழ் சினிமாவில் கடந்த ஆறு ஆண்டுகளில், 5 திரைப்படங்களை இயக்கி இன்று தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக மாறி உள்ளார் லோகேஷ் கனகராஜ் என்று கூறினால் அது மிகையல்ல. துவக்கத்தில் குறும்படங்களை இயக்கி அதை தனது நண்பர்களின் உதவியால் வெளியிட்டு, அதன் மூலம் தனக்கு கிடைத்த "மாநகரம்" என்கின்ற திரைப்படத்தின் வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு வளர்ந்தவர் அவர். 

அதைத் தொடர்ந்து கைதி, மாஸ்டர், விக்ரம் மற்றும் லியோ என்று தொடர்ச்சியாக ஹிட் திரைப்படங்களை கொடுத்து வரும் இயக்குனர் தான் லோகேஷ் கனகராஜ். தற்பொழுது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்ற கோலிவுட் சினிமாவின் முன்னணி நடிகரை இயக்கும் வாய்ப்பையும் பெற்றிருக்கிறார் அவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கூலிங் கிளாஸ் போட்டு ஜம்முனு போஸ் கொடுத்த கேப்டன்... வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரேமலதா 

இந்நிலையில் தனது "ஜி ஸ்குவாட்" என்கின்ற தயாரிப்பு நிறுவனம் குறித்த அறிவிப்பை அவர் சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டிருந்தார். மேலும் உரியடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகரும், இயக்குனமான விஜயகுமார் நடிப்பில், அப்பாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள "ஃபைட் கிளப்" என்கின்ற திரைப்படத்தையும் அவர் வழங்க உள்ளது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் G Squad நிறுவனம் துவங்கப்பட்டு அதன் மூலம் வெளியாகும் முதல் திரைப்படமான "ஃபைட் கிளப்" படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் பங்கேற்று பேசிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். அவர் பேசியது பின்வருமாறு.. கடந்த 2012 ஆம் ஆண்டு இயக்குனராக தன்னை நிலை நிறுத்திக்கொள்ள நான் போராடிய பொழுது, தனது குறும்படத்தை வெளியிட தன்னுடைய நண்பர்கள் சிலர் மட்டுமே உதவியதாகவும். 

அவர்கள் நான் பிற்காலத்தில் பெரிய இயக்குனராக வருவேனா இல்லையா என்பதை பார்க்கவில்லை. அதன் மூலம் நமக்கு லாபம் கிடைக்குமா என்று பார்க்கவில்லை. ஆனால் என் உழைப்பின் மீது அவர்களுக்கு இருந்த நம்பிக்கையின் காரணமாக தங்களிடம் இருந்த பொருளைக் கொண்டு என் படத்தை வெளியிட்டு, அதை பல தயாரிப்பாளர்கள் பார்க்கும் வண்ணம் உதவினார்கள்.

அப்படி அவர்கள் செய்ததன் மூலம் எனக்கு கிடைத்த வாய்ப்பு தான் மாநகரம், மேலும் இன்று நான் இந்த மேடையில் நிற்க காரணமும் அதுதான். ஆகவே அவர்களுக்கு என்னால் இயன்றதை திருப்பிச் செய்ய உருவாக்கப்பட்டது தான் இந்த இந்த G Squad. இந்த நிறுவனத்தின் மூலம் பெறப்படும் பணத்தை என் சுய தேவைக்காக பயன்படுத்த போவதில்லை, மீண்டும் அந்த பணத்தை இதே தொழில் செலவிட நான் விரும்புகிறேன். 

மீண்டும் படமாகிறது சில்க் ஸ்மிதாவின் வாழ்கை வரலாறு.. களமிறங்கும் அந்த பேய் பட நாயகி - வெளியான First Look!

அதிலும் குறிப்பாக துடிப்போடு இருக்கும் இயக்குனர்களுக்காக நிச்சயம் இந்த ஜி குவாட் நிறுவனத்தை செயல்படுத்துவேன் என்று மேடையில் எமோஷனலாக பேசியுள்ளார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளைஉடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios