*    சீயான் விக்ரமின் மகன் துருவ் நடித்து, ரிலீஸாக இருக்கும் ‘ஆதித்ய வர்மா’ படத்தின் ஹீரோயினான பனிதா ‘அர்ஜுன் ரெட்டியின் ஹிந்தி ரீமேக்கின் சில காட்சிகளை பார்த்தேன். அதில் நடிக்க எனக்கு உடன்பாடில்லை என கூறினேன். உடனே விக்ரம், இயக்குநர் ஆகியோர் ஆலோசனை பண்ணி எனக்கு ஏற்றபடி காட்சியை மாற்றினர்.’

(ஏத்தபடி ரொம்ப வசதியா மாத்திக்குறது, மாறுறது இதுல எல்லாம் சீயான் கில்லாடியாச்சே!)

*    மண்டி ஆன்லைன் ஆப் விவகாரத்தினால் விஜய்சேதுபதி மீது தமிழகத்தில் சிறிது எரிச்சல் உணர்வுகள் தோன்றியுள்ளன. இந்த நேரத்தில் வரும் 15-ம் தேதியன்று அவர் நடித்திருக்கும் ‘சங்கத்தமிழன்’ வெளியாகிறது. இதே நாளில்தான் விஷால் நடித்திருக்கும் ‘ஆக்‌ஷன்’ படமும் ரிலீஸ். இந்தப் படத்தில் விஷாலுக்கு இணையாக தமன்னா ஆக்‌ஷனை தெறிக்கவிட்டுள்ளார். 

*    சைரா நரசிம்ம ரெட்டி ஹிட்டா அல்லது ஃபிளாப்பா என புரியாத நிலையில் அடுத்த படத்துக்கு ரெடியாகிவிட்டார் சிரஞ்சீவி. இதில் அவரது ஜோடி நம்ம த்ரிஷா. பதின்மூன்று வருடங்களுக்கு முன்பாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிரஞ்சீவிகாருடன் ‘ஸ்டாலின்’ எனும் பிளாக்பஸ்டரில் நடித்த பின் இப்போது மீண்டும் இதில் சேருகிறார். இயக்கம் கொரட்டல சிவா. 


*    ஹிந்தி படத்துக்காக சைஸ் ஜீரோ லெவலுக்கு போன கீர்த்தி சுரேஷ் மீண்டும் ’ஃபார்முக்கு’ வந்திருக்கிறார். கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் கதையின் நாயகியாக அவர் நடித்திருக்கும் ‘பெண் குயின்’ படத்தின் ஷூட் நிறைவடைந்துவிட்டது. ரிலீஸுக்காக காத்திருக்க முடியவில்லை! அவ்ளோ ஆர்வமா இருக்குது! என்று புகழ்ந்துள்ளார். 

*    கஜினி படத்தில் நடித்தது தான் செய்த மிகப்பெரிய தவறு! ஹீரோயினுக்கு இணையான வேடம்னு சொல்லி கூட்டிட்டு போயிட்டு, வேற மாதிரி எடுத்துட்டாங்க! என்று நயன் தாரா பேட்டியளித்துள்ளதாக வெளியாகி இருக்கும் தகவல், இப்போது அவர் ரஜினி ஜோடியாக நடித்துக் கொண்டிருக்கும் தர்பார் படத்தின் இயக்குநரான ஏ.ஆர்.முருகதாஸை கடுப்பாக்கியுள்ளது. காரணம், கஜினியின் இயக்குநர் அவரேதான். தர்பார் ஷூட்டில் தயாரிப்பு தரப்பு மற்றும் இயக்குநர் ஏ.ஆர்.எம். இடையில் நயனுக்கு லடாய்! என பேசப்பட்ட நிலையில், நயன் இப்படி பேசியிருப்பது அதிர வைத்துள்ளது.