இணையங்களில் அஜீத்,விஜய் ரசிகர்களுக்கு இடையே நடக்கும் குழாயடிச் சண்டை நேற்று மாலை முதல் சூடு பிடித்துவருகிறது. ஒரிஜினல் ரசிகர்களுக்கு மத்தியில் சில போலியான ரசிகர்கள் உள்ளே புகுந்து குழப்புவதால் அச்சண்டை இம்முறை வழக்கத்தை விட சற்று அசிங்கமாகவே நடந்துவருகிறது.

ஜூன் 22 தளபதி விஜய்யின் 45 வது  பிறந்தநாள். அதையொட்டி #ThalapathyBDayCDP என்கிற குறியீட்டுச் சொல்லைப் பயன்படுத்தி விஜய் ரசிகர்கள் விஜய்க்கு வாழ்த்துச் சொல்லி வந்தனர்.இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக அஜீத் ரசிகர்கள் #June22VijayDeathDay என்கிற மிக மட்டமான  குறியீட்டுச் சொல்லை உருவாக்கி அதைப் பிரபலப்படுத்தினர்.இதற்கு விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி பொதுவானவர்களும் நல்ல நாளில் விஜய்யைப் பற்றி இப்படிச் சொல்லலாமா? எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதற்குப் பதிலடி கொடுக்கும்விதமாக விஜய் ரசிகர்கள் என்ன செய்வார்களோ? என்கிற எதிர்பார்ப்பு இருந்தது.அவர்களோ, இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல் என்கிற குறளுக்கு ஏற்ப, அஜீத் ரசிகர்களுக்குப் பதிலடி கொடுக்க #LONGLIVEAJITHSIR என்கிற குறியீட்டுச் சொல்லை உருவாக்கி அதைப் பிரபலப் படுத்தினர்.இதைச் சற்றும் எதிர்பாராத அஜீத் ரசிகர்கள் அமைதியாகிவிட்டனர்.

இந்த சண்டையை பொதுவாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த நடுநிலையாளர்கள் சமீபத்தில் வெளியான நேர்கொண்ட பார்வை பட வசனமான ‘ஒருத்தர் கிட்ட காட்டுற விசுவாசத்துக்காக அடுத்தவங்கள ஏன் அசிங்கப்படுத்துறீங்க’ என்று அஜீத் சொன்னதை மேற்கோள் காட்டி சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.