fefsi director pressmeet

தமிழ் திரைப்படங்களில் நடிக்கும் வெளிமாநில கதாநாயகிகள், தேவையற்ற உதவியாளர்களை அழைத்துவந்து தயாரிப்பாளர்களுக்கு செலவு வைக்க வேண்டாம் என தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனத்தின் இயக்குநர் ஆர்.கே.செல்வமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனத்தின் புதிய தலைவராக ஆர்.கே.செல்வமணி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், சென்னை வடபழனியில் இன்று புதிய நிர்வாகிகளை அறிமுகப்படுத்தினார். அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது பேசியதாவது :

நடிகைகள் தங்களது தற் பெருமைக்காக வெளிமாநிலங்களில் இருந்து மேக்கப் போடும் ஆட்களை அழைத்து வருகிறார்கள்.

இதனால் பெப்சி யூனியனில் இருக்கும் தொழிலாளர்கள் பாதிக்கப்படுகிறார்கள்.

தமிழ் திரைப்படங்களில் நடிக்கும் வெளிமாநில கதாநாயகிகள், தேவையற்ற உதவியாளர்களை அழைத்துவந்து தயாரிப்பாளர்களுக்கு செலவு வைக்க வேண்டாம்.

ஃபெப்சி ஊழியர்களையே நடிகைகள் தங்கள் பணிகளுக்கு பயன்படுத்த வேண்டும்.

ஃபெப்சி ஊழியர்கள் ஏப்ரல் 15முதல் உறுப்பினர்கள் அட்டை இருக்கிறவர்களிடம் மட்டுமே பணிபுரிவார்கள்.

பெப்சி 50 ஆம் ஆண்டு பொன்விழா ஆண்டு, மற்றும் தமிழ் திரைப்படத் துறையின் 100வது விழா விரைவில் நடக்கும்.

சிறிய படங்கள் பெரிய படங்கள் என்ற எண்ணம் மாறி தற்போது திரைப்படங்களின் நிலைமை நல்ல படங்கள்,குப்ப படங்கள் என்றாகிவிட்டது.

அதனால் நல்ல தொழில் தெரிந்த ஆட்களிடம் சங்கங்களின் உறுப்பினர்கள் அட்டை இருந்தால் மட்டும் பெப்சி நபர்கள் பணிபுரிவார்கள்.

இவ்வாறு ஆர்.கே.செல்வமணி தெரிவித்தார்.