செய்திவாசிப்பாளராகவும், குணச்சித்திர நடிகையாகவும் தமிழ் ரசிகர்களால் நன்கு அறியப்பட்டவர் பாத்திமா பாபு. புதுச்சேரியில் பிறந்து வளர்ந்த இவர் ஆரம்பத்தில், தூர்தசன் தொலைக்காட்சியில் தான் செய்திவாசிப்பாளராக தன்னுடைய பணியை துவங்கினார். 

இவரின் தெளிவான தமிழ் உச்சரிப்பும், அழகும் இவரை மற்றொரு தளத்திற்கு கொண்டு சென்றது. தனியார் தொலைக்காட்சி ஒன்றில் செய்திவாசிப்பாளராக மாறினார். பின் வெள்ளித்திரையில் இயக்குனர் கே.பாலச்சந்தர் இயக்கிய 'கல்கி' படத்தில் 1996 ஆம் ஆண்டு ஒரு நடிகையாக அறிமுகமானார். 

இதைத்தொடர்ந்து, நேருக்கு நேர், நீ வருவாய் என, நினைவிருக்கும் வரை, குசேலன், உள்ளிட்ட 30 க்கும் அதிகமான படங்களில் நடித்தார். தமிழ் மட்டும் இன்றி பல மலையாள படங்களிலும் நடித்துள்ளார். அதே போல் சின்னத்திரை சீரியல்களிலும் நடித்து வருகிறார். 

இவர் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளதால், இவருடைய ரசிகர்கள் இவருக்கென ஆர்மி ஒன்றை துவங்கி, அதில் இவரை பற்றிய புகைப்படங்கள் போன்றவற்றை வெளியிட்டு வருகிறார்கள். அந்த வகையில், பாத்திமா பாபு இளம் வயது புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. 

இதுவரை அதிக அளவில் யாராலும் பார்க்கப்படாத இந்த அறிய புகைப்படத்தில், பார்த்திமா பாபு மிகவும் அழகாக இருக்கிறார் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள். அந்த புகைப்படம் இதோ...