சமூக பிரச்னைகளை கவனம் செலுத்தி ஹேஷ்டேக் போடுமாறு ரசிகர்களிடம் கேட்டுக் கொண்டார். ஆனால், அவரது ரசிகர்களோ அய்யோ #அய்யோஅம்மாஆடியோலான்ச் என்கிற ஹேஸ்டேக்கை உருவாக்கி விஜயை அசிங்கப்படுத்தி வருகின்றனர். 

 

நேற்று தனியார் கல்லூரி ஒன்றில் பிகில் பட ஆடியோ வெளியீட்டு விழா நடைபெற்றது. அப்போது கூட்டம் அதிகரித்ததால் ரசிகர்கள் அடித்து விரட்டப்பட்டனர்.  இந்த விவகாரம் விஜய் ரசிகர்களை ஆத்திரப்பட வைத்துள்ளது. #அய்யோஅம்மாஆடியோலான்ச்  என்கிற ஹேஸ்டேக்கை உருவாக்கி ட்விட்டர் பக்கத்தில் ட்ரெண்டாக்கி வருகின்றனர். அதில், ‘’விஜய் ரசிகர்கள் என்று சொல்லிக் கொள்ளவே அசிங்கமாக இருக்கிறது. விஜய் மேடையில் தான் என் நெஞ்சில் குடியிருக்கும் ரசிகர்களே எனக் கூறுகிறார். வெளியில் போலீசாரை வைத்து தனது ரசிகர்களை விரட்டி அடிக்கிறார்’ என்றெல்லாம் பதிவிட்டு வருகின்றனர். 

 

பிகில் பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய விஜய், ‘சுபஸ்ரீ போன்ற சமூக பிரச்னைகளை கவனம் செலுத்தி ஹேஷ்டேக் போடுங்கள். சமூக வலைதளங்களில் எனது ரசிகர்கள் மோதலில் ஈடுபட வேண்டாம்’எனக் கேட்டுக் கொண்டார். ஆனால், அவரது ரசிகர்கள் விஜய்க்கு எதிராக ஹேஸ்டேக்கை உருவாக்கி ஆத்திரத்தில் பச்சை பச்சையாக திட்டி வருகின்றனர்.  இதனால், விஜய் கடும் அப்செட்டில் இருப்பதாக கூறப்படுகிறது.