தனுஷின் இரட்டை தோற்றங்கள் அடங்கிய நானே வருவேன் படத்தின் போஸ்டரை இயக்குனர் செல்வராகவன் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

தனுஷ் - செல்வராகவன் கூட்டணியில் உருவாகும் படங்களுக்கு எப்போதுமே தனி மவுசு உண்டு. இவர்கள் இருவரும் இதுவரை இணைந்து பணியாற்றிய துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன.

கடந்த 11 ஆண்டுகளாக இணைந்து பணியாற்றாமல் இருந்து வந்த இந்த பிளாக்பஸ்டர் கூட்டணி தற்போது மீண்டும் இணைந்துள்ளது. இவர்கள் காம்போவில் உருவாகும் புதிய படத்துக்கு நானே வருவேன் என பெயரிடப்பட்டு உள்ளது. இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக இந்துஜா நடிக்கிறார்.

ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு புவனா சுந்தர் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடிப்பதாக கூறப்பட்டு வந்தது.

அதனை உறுதிப்படுத்தும் விதமாக, தனுஷின் இரட்டை தோற்றங்கள் அடங்கிய போஸ்டரை இயக்குனர் செல்வராகவன் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இந்த போஸ்டரை பார்த்த ரசிகர்கள் அவரை திட்டித் தீர்த்து வருகின்றனர்.

ஏனெனில் இது எனைநோக்கி பாயும் தோட்டா மற்றும் வடசென்னை படங்களில் இடம்பெறும் தனுஷின் தோற்றத்தை அப்படியே காப்பி அடித்து அவர் இந்த போஸ்டரை வெளியிட்டுள்ளதாக நெட்டிசன்கள் அவரை மீம் போட்டு கிண்டலடித்து வருகின்றனர்.

Scroll to load tweet…
Scroll to load tweet…
Scroll to load tweet…
Scroll to load tweet…