வானம் தொட்டுப்போன மானமுள்ள சாமி… எஸ்.பி.பி.-யின் நினைவுநாளில் கதறி அழும் ரசிகர்கள்…!
பாட்டுடைத் தலைவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் முதலாமாண்டு நினைவு தினத்தில் திரும்பிய திசையெல்லாம் ரசிகர்கள் அவரது நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர்.
பாட்டுடைத் தலைவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் முதலாமாண்டு நினைவு தினத்தில் திரும்பிய திசையெல்லாம் ரசிகர்கள் அவரது நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர்.
டி.வி.-யை சுவிட்ச் ஆன் செய்தால் எஸ்.பி.பி.-யின் பாடல், டுவிட்டர் வந்தால் எஸ்.பி.பி. பாடல் வரிகள், பேஸ்புக் பக்கம் சென்றாலும் அங்கும் ரசிகர்களின் எண்ணங்களில் முழுக்க நிறைந்திருக்கிறார் எஸ்.பி. பாலசுப்பிரமணியம்.
எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் முதலமாண்டு நினைவுதினத்தையொட்டி உலகம் முழுவவதும் உள்ள அவரது ரசிகரள் இசை அஞ்சலி செலுத்தி வருகின்றனர். முன்னணி செய்தித் தொலைக்காட்சிகளில் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தில் சிறப்பு தொகுப்பு ஒளிபரப்பாகிறது. பேஸ்புக், வாட்ஸாப், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் ஸ்டோரிகளில் எஸ்.பி.பி-யின் பாடல்கள் தான் ஒலித்துக்கொண்டிருக்கின்றன.
எஸ்.பி.பி. பாடல்களில் தங்களுக்கு பிடித்தவற்றை ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர். அவரது பாடல்கள் தங்களது வாழ்வில் ஏற்படுத்திய மாற்றங்களையும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். ரேடியோ, டி.வி., சமூக வலைதளங்கள் என அனைத்தையும் ஆக்கிரமித்திருக்கிறார் பாடும் நிலா பாலு.