ரஜினிகாந்தின் பிளாக் பஸ்டர் வெற்றிப் படங்களுக்கு முதல் பாடலை பாடியிருந்த் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், அவர் மறைவதற்கு முன்னர் அண்ணாத்த படத்டிற்கும் பாடியுள்ளார்.

ரஜினிகாந்தின் பிளாக் பஸ்டர் வெற்றிப் படங்களுக்கு முதல் பாடலை பாடியிருந்த் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், அவர் மறைவதற்கு முன்னர் அண்ணாத்த படத்டிற்கும் பாடியுள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்திய சினிமா ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படம் அண்ணாத்த. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கும் இப்பட்த்தின் ஒவ்வொரு அப்டேட்டும் இணையத்தை தெறிக்கவிடுகிறது. இந்தநிலையில் அண்ணாத்த படத்தின் முதல் பாடல் இன்று மாலை வெளியாகும் என தயாரிபு நிறுவனமான சன்பிக்சர்ஸ் அறிவித்துள்ளது.

ரஜினியின் ஒவ்வொரு பிளாக் பஸ்டர் படத்திற்கும் முதல் பாடலை பாடியுள்ள எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இப்படத்திற்கும் முதல் பாடலை பாடியிருக்கிறார். அவரது கந்தர்வக் குரலில் பாடப்பட்ட பாடல்தான் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகிறது. எஸ்.பி.பி. கடைசியாக பாடிய பாடலை கேட்பதற்காக ரசிகர்கள் காத்துக்கிடக்கின்றனர். பாடும் நிலா பாலுவின் குரலைக் கேட்க உண்டாகும் காத்திருப்பு இதய துடிப்பை எகிற வைப்பதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.