Rajinikanth Deepawali Wish : உலகெங்கும் உள்ள இந்தியர்களால் இன்று தீபாவளி திருநாள் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. திரை துறையை சார்ந்த பல்வேறு பிரபலங்களும் தங்களுடைய ரசிகர்களுக்கும், இந்தியர்களுக்கும், தமிழர்களுக்கும் தங்களுடைய தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவின் மூத்த மற்றும் முன்னணி நடிகரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தற்பொழுது ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வரும் தனது 170வது திரைப்படத்தில் நடித்த வருகிறார். ஏற்கனவே கேரளா மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தலைவர் 170 திரைப்படத்தில் திரைப்படப் பணிகள் தொடர்ச்சியாக நடந்து வந்தது. 

இதற்கு இடையில் தற்பொழுது சென்னையில் உள்ள தனது போயஸ் கார்டன் வீட்டில் உள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இன்று தீபாவளி திருநாளை முன்னிட்டு, தனது வீட்டின் முன் கூடிய ரசிகர்களை சந்தித்து தனது தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்தார். தற்பொழுது அந்த வீடியோ பெரிய அளவில் பேய்களாக பகிரப்பட்டு வருகிறது.

ISWARYA MENON: தீபாவளி ஸ்பெஷல்.. பச்சைநிற பட்டுப்புடையில் பளீச் என மின்னும் ஐஸ்வர்யா மேனன்! கியூட் போட்டோஸ்!

இந்த திரைப்பட பணிகளை முடித்துவிட்டு அடுத்தபடியாக லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ள தனது 171வது திரைப்படத்தில் உடனடியாக அவர் கலந்துகொள்ள இருக்கிறார். இந்த படத்தில் பல முக்கியமான நடிகர்கள் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

Scroll to load tweet…

மேலும் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் காட்சிகள் அதிகம் நிறைந்த திரைப்படமாக இது அமைக்கப்படும் என்றும் ஏற்கனவே ஒரு தகவல் வெளியான நிலையில், இது என்ன கதைக்கலமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் தொற்றியுள்ளது. ஆனால் இந்த திரைப்படம் லோகேஷின் சினிமாடிக் யூனிவெர்ஸ்க்குள் இல்லை என்று ஏற்கனவே அவர் தெளிவுபடுத்தி உள்ளார். 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.