பாலிவுட்டின் முன்னணி நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புட் ஜூன் 14ம் தேதி அன்று மும்பையில் உள்ள அவரது பாந்த்ரா குடியிருப்பில் இறந்து கிடந்தார். 34 வயதான நடிகரின் மரணம் தொடர்பான விசாரணை தொடர்கதையாகவே போய்கொண்டிருக்கிறது. பீகார் போலீசார் இந்த வழக்கை விசாரிக்கத் தொடங்கியதில் இருந்து பல திருப்பங்களை ஏற்படுத்தியுள்ளது.சுதஷாந்த் காதலி ரியா மீது பல்வேறு கோணங்களில் விசாரணை போய் கொண்டிருக்கிறது. சுஷாந்திடம்இருந்து தங்கம் பணம் கொள்ளையடிப்பதற்காகவே இதுபோன்று நடந்ததா? இல்லை எங்கே சினிமாதுறையில் இளம் வயதில்இமயத்தை தொட்டுவிடுவானோ? என்கிற போட்டியில் ரியாவை பயன்படுத்தி சுஷாந்த் கொலைசெய்யப்பட்டாரா? என்கிற கோணத்திலும் வழக்கு விசாரணை போய்க்கொண்டிருக்கிறது.


சுஷாந்த் சிங் ராஜ்புட் மரணத்திற்கு நீதி கேட்டு தினமும் ரசிகர்கள் பல ஹேஷ்டேக்குகளை ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். சுஷாந்தை போலவே ஸ்ரீதேவியின் மரணமும் பல்வேறு மர்மங்களை உள் அடங்கியதாகவே ரசிகர்களால் பார்க்கப்படுகிறது. தனது உறவினர் திருமணத்திற்காக துபாய் சென்ற நடிகை ஸ்ரீதேவி அங்கு தங்கி இருந்த ஓட்டலின் குளியல் தொட்டியில் மூழ்கி உயிரிழந்தார். அதிக மது போதையில் ஸ்ரீதேவி, அவர் தங்கி இருந்த ஓட்டல் குளியலறையில் மூழ்கி  உயிரிழந்ததாக கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி தெளிவு படுத்தப்பட்டது

ஆனால் அவருடைய  மரணத்தில் சந்தேகம் உள்ளது என தனியார் துப்பறியும் நிறுவனம் நடத்திவரும் வேத் பூ‌ஷன் என்ற முன்னாள் டெல்லி துணை காவல் ஆணையர் சில தகவல்களை தனது ஆராய்ச்சிக்கு பின் வெளியிட்டிருந்தார். அதாவது  ஸ்ரீதேவி மரணத்திற்கு பின், அவருடைய இறப்பில் சந்தேகம் உள்ளது எனவும்  240 கோடி காப்பீட்டு தொகைக்காக ஸ்ரீதேவி கொல்லப்பட்டிருக்கலாம் என்று இயக்குநர் சுனில் சிங் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.அதில், ‘ஐக்கிய அரபு நாடுகளில் விபத்து காரணமாக இறந்தால், 240 கோடி காப்பீட்டு தொகை கிடைக்கும் என்று இருக்கிறது. 5.7 அடி உயரமுள்ள ஸ்ரீதேவி எப்படி 5.1 அடி குளியல் தொட்டியில் மூழ்க முடியும்?’ என்று சந்தேகம் எழுப்பி இருந்தார்.

ஆனால் அந்த மனுவை அப்போது  விசாரித்த உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.இந்நிலையில் சுஷாந்த் வழக்கு விசாரணையைப் போல் ஸ்ரீதேவி மரணம் தொடர்பாகவும் சிபிஐ விசாரணை நடத்த வேண்டுமென ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். #CBIEnquiryForSridevi என்ற ஹேஷ்டேக்கில் ரசிகர்கள் பலரும் தங்களது விதவிதமான சந்தேகங்களை பதிவு செய்து வருகின்றனர்.