’அண்ணே முகநூல், ட்விட்டர் பக்கங்களை விட்டு வெளியேறி அடுத்த படம் இயக்குற பொழைப்பப் பாருண்ணே’என்று பலரும் தொடர்ந்து யோசனைகள் சொல்லி வந்தாலும் கவின்,லாஸ்லியா வகையறாக்களுக்கு சவால் விடுவதை நிறுத்துகிறபாடில்லை இயக்குநர் சேரன்.

பிக்பாஸ் சீஸன் 3’நிகழ்ச்சி முடிந்து இல்லத்துவாசிகள் அனைவரும் தங்கள் அடுத்த பொழைப்பைப் பார்க்கக் கிளம்பிவிட்ட நிலையில் இயக்குநர் சேரன் மட்டும் இன்னும் விடாப்பிடியாய் கவின், லாஸ்லியா கோஷ்டிகளின் தூண்டிலுக்கு இரையாகிக்கொண்டிருக்கிறார்.அதன் தொடர்ச்சியாய் நேற்று ஆங்கில ‘ஜோக்கர்’படத்தின் போஸ்டரை சேரனுக்கு டேக் பண்ணிவிட்ட ஒருவர்,...ஒருவனை [அதாவது கவினை]க் கடுபேத்தி,வெறுப்பேத்தி,வெறியனாக்கி தவறுகள் பல செய்ய வைத்து இதுதான் அவன் சுயரூபம் என சொல்லும் சமூகம் இது’என்று சேரனைத் தாக்கியிருந்தார்.

அதைக் கண்டு காண்டான சேரன்,...ஒருத்தரபாத்து சம்பந்தமே இல்லாம பொறாமை பட்டு சாவுறதவிட ஒழுங்கா உழைச்சு பொழைச்சு போட்டியா வந்து நின்னுகாட்டலாம்ல. முகத்தை காமிக்காம இன்னொரு படத்தைவச்சு ஒளிஞ்சுக்குறத விட நீ உன் போட்டோவ வச்சு தில்லா நின்னு பதில் சொல்லு அங்க ஆரம்பிக்கும் உன் வெற்றி. இதுக்குமேல பதிலுமில்ல.. பதிவுமில்ல...என்று பதிலளித்திருக்கிறார். அப்பதிவுக்குக் கீழே சேரனின் ரசிகர் ஒருவர்,...Replying to 
@directorcheran ஏண்ணே,  நீ இன்னும் கிளம்பலையாண்ணே.... போண்ணே 
போய் படத்தை இயக்குகிற வழியப்பாருண்ணே....அவனுகளுக்கு,
யாரையாவது உசுப்பேத்திட்டே இருக்கிறது ஒரு போதைண்ணே...என்று வடிவேலு ஸ்டைலில் கமெண்ட் அடித்திருக்கிறார்.