’ஊர்,உலகமெல்லாம் உங்களை ஒரு ஹீரோவாக ஏற்றுக்கொள்ளாதபோது உடன் நின்ற எங்களைக் கைவிடலாமா தலைவர் தனுஷ் அவர்களே’ என்ற பொருள்படும்படி பல்வேறு சாடல்களுடன் கூடிய போஸ்டர் ஒன்று சென்னை முழுவதும் ஒட்டப்பட்டு பரபரப்பாகியுள்ளது.
’ஊர்,உலகமெல்லாம் உங்களை ஒரு ஹீரோவாக ஏற்றுக்கொள்ளாதபோது உடன் நின்ற எங்களைக் கைவிடலாமா தலைவர் தனுஷ் அவர்களே’ என்ற பொருள்படும்படி பல்வேறு சாடல்களுடன் கூடிய போஸ்டர் ஒன்று சென்னை முழுவதும் ஒட்டப்பட்டு பரபரப்பாகியுள்ளது.
கடந்த இரு தினங்களாக ட்விட்டர் மற்றும் வலைதளங்களில் தனுஷுக்கு எதிராக ஒரு போஸ்டர் வைரலாகிவருகிறது. அந்த போஸ்டரில் ‘இவன் எல்லாம் ஒரு ஹீரோவா? இவனுக்கெல்லாம் ஒரு ரசிகர் மன்றமா? என்று ஆரம்பத்தில் வந்த பல அவமானங்களை தாண்டி நின்றவர்கள் நாங்கள்! ரசிகர்களை நீக்குவதற்கு தாண்டி சிவாவும் ராஜாவும் யார்?!!
பல தோல்விகளிலும் என்னை தாங்கிப்பிடித்த தூண்கள்! என் ரசிகர்கள்!! என் ரசிகர்களை எக்காரணம் கொண்டும் நான் கைவிடமாட்டேன்! என்று சொன்னாயே தலைவா!! ஆனால், ! உழைத்த ரசிகர்களை மறந்துவிட்டீர்களா? 
நாங்களா? உங்களை தனுஷ்-காக கட் அவுட், பேனர், போஸ்டர் என செலவு செய்ய சொன்னோம் எனறு ஆணவத்தோடு பேசிய டச் அப்மேன் எச்ச ராஜா மீது நடவடிக்கை எடு! தலைவன் தனுஷ்! நடவடிக்கை எடுக்காவிட்டால் எந்த தியேட்டரிலும் ரசிகர்கள் கொண்டாட்டம் இல்லாத படமா! என சொல்ல வைத்துவிடாதீர்கள்… நீங்கள் மறந்தால், போராட்டம் வெடிக்கும் என அந்த போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
போஸ்டரில் இடம்பெற்றுள்ள சில கருத்துகள் குழப்பமாக இருந்தாலும் தனுஷின் ரசிகர் மன்றத்தில் ஏதோ ஒரு பெரிய உள்நாட்டுக் கழகம் இருப்பதைப் புரிந்துகொள்ளமுடிகிறது. இப்பஞ்சாயத்தில் சம்பந்தப்பட்ட சிலர் ‘தலைவா அஜீத் மாதிரி பேசாம ரசிகர் மன்றத்தைக் கலைத்துவிடு’ என்று ஐடியாவும் கொடுத்திருக்கிறார்கள்.
