fan of this famous actor is very happy for the moment he spent with his star
நடிகர் விஜய்க்கு என ஒரு ரசிகர் பட்டாளமே இருக்கிறது. அவர்களில் அவரை ஒரு முறையாவது பார்க்க வேண்டும். அவருடன் ஒரு புகைப்படமாவது எடுத்துக்கொள்ள வேண்டும். என்பது பெரும்பாலான அவரது ரசிகர்களின் ஆசை. ஆனால் அத்தனை பேருக்கும் அந்த மாதிரி ஒரு வாய்ப்பு அமைவது கடினம். ஆனால் விஜய் ரசிகர் ஒருவருக்கு, அவர் ஆசைப்பட்டதற்கும் மேலான அதிஷ்டம் நேற்று கிடைத்திருக்கிறது.

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த முத்துகுட்டி என்பவர் தான், அந்த விஜய் ரசிகர். நேற்று விஜய் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில், உயிரிழந்தோரின் குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். நள்ளிரவில் எந்த வித ஆடம்பரமோ, ஊடக வெளிச்சமோ இல்லாமல், எளிமையாக வந்த விஜய் அவரது ரசிகரான முத்துகுட்டியுடன் தான், பைக்கில் ஓவ்வொருவரின் வீட்டிற்கும் சென்றிருக்கிறார்.
விஜய்யுடன் ஒரு புகைப்படமாவது எடுக்க வேண்டும். என ஆவலுடன் இருந்த அவரது ரசிகருக்கு, இந்த சம்பவம் இன்ப அதிர்ச்சியை அளித்திருக்கிறது. இதனை தூத்துக்குடி மாவட்ட விஜய் ரசிகர்கள் தங்களது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கின்றனர்.
”இதுநாள் வர விஜய் கூட ஒரு போட்டோ கூட எடுக்கலனு ஃபீல் பண்ணிட்ருந்த தன்னோட ரசிகன் பைக்குல, ஒவ்வொருத்தர் வீட்டுக்கும் போயிருக்கார். நண்பன் செம ஹேப்பி” என அந்த டிவிட்டர் பதிவில் அவர்கள் குறிப்பிட்டிருக்கின்றனர்.
