பிரபல தயாரிப்பாளர் ஒருவர், மன அழுத்தம் காரணமாக 27 ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

55 வயதாகும் பிரபல ஹாலிவுட் பட தயாரிப்பாளர் ஸ்டீவ் பிங், சூப்பர் ஹிட் பாலிவுட் திரைப்படங்களான டாம் ஹாங்க்ஸ் திரைப்படம்,  தி போலார் எக்ஸ்பிரஸ் போன்ற தரமான படங்களை தேர்வு செய்து தயாரித்து மிகவும் பிரபலமானவர். 

இவர் பிரபல முன்னாள் ஹாலிவுட்  நடிகை எலிசபெத் ஹர்லியின் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகள்: எம்.எஸ்.விஸ்வநாதன் 92 ஆவது பிறந்தநாள்..! அரிய புகைப்பட தொகுப்பு!
 

ஸ்டீவ் பிங் கடந்த சில மாதங்களாக அதிக மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படும் நிலையில், திங்கள் கிழமை அன்று, 1 மணி அளவில், லாஸ் ஏஞ்சல்ஸ் செஞ்சுரி சிட்டியில் இவர் வசித்து வரும் சொகுசு அடுக்குமாடி கட்டிடத்தின் 27 வது மாடியில் இருந்து கீழே விழுந்து ஸ்டீவ் பிங் தற்கொலை செய்து கொடுள்ளார். இந்த சம்பவம் ஹாலிவுட் திரையுலகினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

ஸ்டீவ் பிங் சில்வெஸ்டர் ஸ்டாலோனின் கெட் கார்ட்டர் ’மற்றும் மார்ட்டின் ஸ்கோர்செஸின் ஷைன் எ லைட் போன்ற திரைப்படங்களைத் தயாரித்துள்ளார்,. மேலும் 2003 ஆம் ஆண்டு கங்காரு ஜாக் திரைப்படத்தில் எழுத்தாளராக பணியாற்றியுள்ளார். 

மேலும் செய்திகள்: வாரிசு நடிகர் முன்னாள் அசிங்கப்படுத்தப்பட்ட அஜித்..! திறமையால் தட்டி தூக்கி ஓரம்கட்டிய தல!
 

இவருடைய மரணம் குறித்து, ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள இவருடைய எலிசபெத் ஹர்லி, அவருடன் இருந்த சில சிறப்பான தருணங்கள் குறித்து தெரிவித்து, இருவரும் எடுத்து கொண்ட புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.