famouse kannada anchor death in road accident

கன்னட சினிமாவில் மிகவும் பிரபலமான தொகுப்பாளர்களில் ஒருவர் சந்தன், 34 வயதாகும் இவர், பாடல்கள் ஒளிபரப்பாகும் தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வந்தார். மேலும் பிரபலங்கள் கலந்துக்கொள்ளும் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கியுள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தொகுப்பாளர் என்பதையும் தாண்டி ஒருசில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் இவர், தன்னுடன் பணியாற்றும் இரண்டு தொலைக்காட்சி நடிகர்களுடன் காரில் பயணம் செய்துள்ளார். சந்தன் காரை வேகமாக ஓட்டி சென்றபோது எதிர்ப்பாராத விதமாக கார் நிலைத்தடுமாறி எதிரே வந்த லாரியின் மீது வேகமாக மோதியது. 

இந்த சம்பவத்தில் சந்தன் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார். இவருடன் காரில் சென்ற நண்பர்கள், படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.