Asianet News TamilAsianet News Tamil

புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த பிரபல நடிகர் மரணம்!

பிரபல ஹாலிவுட் நடிகர் பீட்டர் பாண்டா, சமீப காலமாக புற்றுநோயால் அவதி பட்டு வந்த நிலையில், அவர் மரணமடைந்த விஷயத்தை, அவருடைய சகோதரி வெளியிட்டுள்ளார்.
 

famouse hollywood actor death
Author
Chennai, First Published Aug 18, 2019, 2:07 PM IST

பிரபல ஹாலிவுட் நடிகர் பீட்டர் பாண்டா, சமீப காலமாக புற்றுநோயால் அவதி பட்டு வந்த நிலையில், அவர் மரணமடைந்த விஷயத்தை, அவருடைய சகோதரி வெளியிட்டுள்ளார்.

'ஈஸி ரைடர்'  படம் மூலம் பிரபலமானவர் நடிகர் பீட்டர் பாண்டா.  டென்னிஸ் ஹாப்பர் இயக்கத்தில் வெளிவந்த இந்தப் படத்தை தயாரித்த வரும் பீட்டர் பாண்டா தான்.  இவரது தந்தை ஹென்றி பாண்டாவும்,   ஹாலிவுட் திரையுலகத்தில் புகழ்பெற்ற நடிகராக இருந்தவர்.

famouse hollywood actor death

'பீட்டர் பாண்டா' சிறிது காலம் நுரையீரல் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த நிலையில், நேற்று முன் தினம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள அவருடைய வீட்டில் மரணமடைந்தார்.  இவருக்கு வயது 79 . 

உடல் னால குறைவு காரணமாக, இவர் இவரது மூத்த சகோதரி  ஜேன் பாண்டாவுடன் வசித்து வந்தார். இந்நிலையில் தன்னுடைய சகோதரர், இறந்ததை மிகுந்த வருத்தத்துடன் கூறியுள்ளார் ஜேன். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் நான் மிகுந்த துக்கத்தில் உள்ளேன்.  என் இனிய இளைய சகோதரர் மரணம் அடைந்துவிட்டார். இந்த கடைசி நாட்களை நான் அவரோடு கழித்து வந்தேன் அவர் சிரித்தவாறே போய்விட்டார் என தன்னுடைய மனக் குமுறலை கொட்டித் தீர்த்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios